நரேந்திர மோடி, ஷேக் ஹசீனா இருநாட்டு வர்த்தகம் குறித்து பேச்சு வார்த்தை!!

  அபிநயா   | Last Modified : 05 Oct, 2019 04:01 pm
bangladesh-pm-sheikh-hasina-s-promise-to-indian-pm-narendra-modi

இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், வங்காள பிரதமர் ஷேக் ஹசீனாவும், இரு நாடுகளின் நன்மைக்காக கலந்துரையாடி, வர்த்தகம், கலாச்சாரம், போக்குவரத்து என்பது போன்ற 7 முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த மாதம் செப் 27., அன்று நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் பொது சபை மாநாட்டில் கலந்து கொண்ட இரு தலைவர்களும், இரு நாட்டின் வளர்ச்சி மற்றும் பொருளாதாரம் குறித்து கலந்துரையாடி, சில வர்த்தக ரீதியான ஒப்புதல்களில் கையெழுத்திட முடிவு செய்திருந்தனர். இதன் தொடர்ச்சியாக, இந்தியாவின் தலைநகரான டெல்லியில் கடந்த வியாழனன்று நடைபெற்ற, சர்வதேச பொருளாதார அமைப்பின், இந்திய பொருளாதார மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்குபெற்ற வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, இந்திய பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இதையடுத்து, தற்போது, இரு நாடுகளும், 7 ஒப்பந்தங்களில் கையெழுத்திட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், இந்தியாவிற்குள் சட்ட விரோதமாக குடியேறியிருப்பவர்களை அடையாளம் கண்டு வெளியேற்றிட உதவிடும் வகையில் தயாரிக்கப்பட்ட தேசிய குடியுரிமை பதிவேடு நடவடிக்கை நியாயமானதுதான் எனவும், பயங்கரவாதத்தை முற்றிலும் ஒழித்திட வேண்டும்  என்ற நோக்கத்துடன் செயல்படும் இந்தியாவிற்கு தனது ஆதரவு எப்போதும் உண்டு எனவும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்த, பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா உறுதியளித்துள்ளார். 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close