அதிகரித்து வரும் பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறல்கள்!!

  அபிநயா   | Last Modified : 05 Oct, 2019 07:32 pm
ceasefire-violations-by-pakistan-in-jammu-and-kashmir-are-high-in-2019

கடந்த 5 ஆண்டுகளை விட, பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறல்கள், இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களிலேயே அதிகரித்திருப்பதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை இந்தியா திரும்ப பெற்றதில் இருந்தே, இந்தியாவின் உள்நாட்டு விவகாரமான இதுகுறித்து பாகிஸ்தான் கருத்து தெரிவித்து வருவதோடு, பல அத்துமீறல்களையும் மேற்கொண்டு வருகிறது. 

இந்திய ராணுவத்தினரின் தகவலின் படி, இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து அக்டோபர் 2 ஆம் தேதிக்குள், பாகிஸ்தான் ராணுவம் 2,225 முறை ஜம்மு காஷ்மீருக்குள் அத்துமீறி நுழைந்திருப்பதாக தெரிய வந்துள்ளது. கடந்த ஆண்டில் 1,629 முறை ஜம்மு காஷ்மீருக்குள் அத்துமீறி நுழைந்திருக்கும் பாகிஸ்தான் ராணுவம், இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களிலேயே, கடந்த ஆண்டை விட அதிக அத்துமீறல்கள் மேற்கொண்டிருப்பது, இந்திய ராணுவத்தினரை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.

பயங்கரவாதத்தாக்குதலுக்கு நிதியுதவி செய்து வருவதாக குற்றம் சுமத்தப்பட்டிருக்கும் பாகிஸ்தான், இந்தியாவுக்குள் நுழைய பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு உதவி வருவதாகவும் இந்திய உளவுத்துறை கூறியுள்ளது.

மேலும், ஜெய்ஷ் இ முகமது என்ற பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள், இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவல் மீது தாக்குதல்கள் நடத்தத் திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை தகவல் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close