மருத்துவத்திற்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு 

  Newstm Desk   | Last Modified : 07 Oct, 2019 03:48 pm
nobel-prize-for-medicine-announced

2019ஆம் ஆண்டு மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு மூன்று பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், வில்லியம் ஜி.கேலின், சர் பீட்டர், கிரேக் எல்.செமன்ஸா ஆகியோருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக்சிஜன் கிடைக்கும் அளவை செல்கள் உணர்ந்து, அதற்கேற்ப தகவமைத்துக் கொள்வது எவ்வாறு என கண்டறிந்ததற்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்று பேருக்கு நோபல் பரிசு  பகிர்ந்தளிக்கப்படுகிறது.

செல்கள் ஆக்சிஜனை எப்படி நுகரும் என்ற ஆய்வு பல்வேறு நோய்களுக்கான சிகிச்சைக்கு உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close