ஸ்விஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களின் பட்டியல் கிடைத்தது!

  Newstm Desk   | Last Modified : 07 Oct, 2019 06:52 pm
swiss-bank-shares-details-about-indian-account-holders

ஸ்விட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கியில் இந்தியர்கள் சிலர் கணக்கு வைத்துள்ளனர். அந்நாட்டு சட்ட விதிகளின்படி, அங்கு கணக்கு வைத்திருப்போர் விபரங்கள் ரகசியம் காக்கப்படும் என்பதால், பல்வேறு நாடுகளை சேர்ந்த அரசியல்வாதிகள், அவர்களின் பினாமிகள், நடிகர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் ஸ்விஸ் வங்கியில் கணக்கு வைத்து, அதில் கருப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ளனர். 

மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான அரசு, இந்தியர்களின் கருப்பு பணத்தை வெளிக்கொண்டுவரும் முயற்சியாக, ஸ்விட்சர்லாந்து அரசிடம் பேச்சு நடத்தியது. இதன் பலனாக, இந்தியர்களின் வங்கி கணக்கு விபரங்களை தெரிவிக்க அந்நாட்டு அரசும் சம்மதம் தெரிவித்துள்ளது. 

இதை தொடர்ந்து, இந்தியர்களின் ஸ்விஸ் வங்கி கணக்கு பற்றிய தகவலை அந்நாட்டு அரசு இந்தியாவுடன் பகிர்ந்துள்ளது. அடுத்தகட்டமாக, 2020ல் இன்னொரு பட்டியலும் பகிர்ந்துள்ளது. தற்போதுவரை அங்கு வங்கி கணக்கு வைத்திருப்போர் யார், 2018ல் வங்கி கணக்கை முடித்தவர்கள் யார் என்ற பட்டியலை அந்நாட்டு அரசு பகிர்ந்து கொண்டுள்ளது. இது முழுவதும் ரகசியம் காக்கப்படும் என இரு நாட்டு அரசுகளும் தெரிவித்துள்ளன. 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close