இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு

  Newstm Desk   | Last Modified : 08 Oct, 2019 04:42 pm
nobel-prize-for-physics-announced

2019 ஆம் ஆண்டுக்கான இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு சுவிட்சர்லாந்து மற்றும் கனடாவைச் சேர்ந்த இயற்பியல் விஞ்ஞானிகள் 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

சூரியனை போல மற்றொரு நட்சத்திரம் மற்றும் அதைச்சுற்றி வரும் கோளை கண்டுபிடித்ததற்காக  ஜேம்ஸ் பீப்ள்ஸ், மைக்கேல் மேயர், திதியர் கியூலோஸ் ஆகிய 3 பேருக்கு நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது. மேலும், அண்டவியல் தொடர்பான இயற்பியல் பங்களிப்பிற்காகவும் மூவருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டது. செல்கள் ஆக்சிஜனை எப்படி நுகரும் என்ற ஆய்வுக்காக வில்லியம் ஜி.கேலின், சர் பீட்டர், கிரேக் எல்.செமன்ஸா ஆகிய 3 பேருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

 newstm.im

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close