உய்குர் மக்களை ஒடுக்கும் சீன அரசுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

  அபிநயா   | Last Modified : 09 Oct, 2019 11:28 pm
us-urges-muslim-nations-to-condemn-china-s-treatment-over-uighur-muslims

சீனாவின் ஜின்ஜியாங் நகரில், முஸ்லீம் மதத்தை சேர்ந்த, 1 லட்சம் உய்குர் இன மக்களை காரணமில்லாமல் கைது செய்து வைத்திருப்பதாகவும், இந்நிலை தொடர்ந்தால், சீனாவுடனான வணிகம் நிறுத்தப்படும் எனவும் விசா தடைகள் விதிக்க முடிவு செய்துள்ளதாகவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளதை தொடர்ந்து, அமெரிக்க தூதரான கெல்லி க்யுரி அதற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் வாஷிங்டன், சமீபத்தில் வெளியிட்ட இந்த ஆண்டிற்கான மனித உரிமை அறிக்கையில், சீனாவின் ஜின்ஜியாங்கில், சிறுபான்மை முஸ்லீம் இன மக்கள் பெரிதளவில் ஒடுக்கப்படுவதாக செய்தி வெளியாகியிருந்தது. இதன் தொடர்பாக, அமெரிக்காவின் ஜெனிவா நகரில் வைத்து பத்திரிக்கையாளர்களை சந்தித்த அமெரிக்க தூதரான கெல்லி க்யுரி,  இது மனித உரிமை அத்துமீறல் என கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், "மியான்மர் மற்றும் சிரியாவில் முஸ்லீம் இன மக்கள் தாக்கப்படுவதை கண்டித்து, அந்நாடுகளுக்கு எதிராக, துருக்கி பலமாக தன் கருத்தை முன் வைத்தது மிகவும் பாராட்டத்தக்கது. ஆனால் தற்போது, தன் மக்கள் சீனாவில் ஒதுக்கப்பட்டும் அடக்கப்பட்டும் வருவதை குறித்து எந்த ஒரு கருத்தும் தெரிவிக்காமல் அமைதி காத்து வருவது எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. 

மேலும், அதிபர் ட்ரம்ப், முஸ்லீம் இன மக்களின் நலனுக்காக தொடங்கப்பட்ட இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு, இது குறித்து சீன அரசுடன் உரையாட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். எதனால் அனைத்து நாடுகளும், முஸ்லீம் அமைப்பும் இப்படி மௌனமாக இருக்கின்றன" என்று கேள்வியெழுப்பியுள்ளார். 

மேலும், சீனாவில் தற்போது நடந்துக்கொண்டிருப்பது கலாச்சார படுகொலை எனவும், சீனாவின் இந்த செயல் வருத்தமளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இது குறித்து அமெரிக்காவின் பல தலைவர்களும் சீன அரசிடம் கண்டனம் தெரிவித்தும், கேள்வியெழுப்பியும் வருகின்றனர். 

1949ஆம் ஆண்டு. சீனா, கிழக்கு துருக்கியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகவும், அதன் பின்னர் தான் துருக்கி நாட்டை சேர்ந்த உய்குர் இன மக்கள், சீனாவின் தன்னாட்சி நகரமான ஜின்ஜியாங்கிற்குள் வரத்தொடங்கினர் என்றும் கூறப்படுகின்றன. இன்று, ஜின்ஜியாங்கின் மக்கள் தொகையில் 45 சதவீதம் வகித்து வருங்கின்றனர் உய்குர்கள். ஆனால், சமீப காலமாக அவர்களது ஊடுருவல் அதிகரித்து வரும் நிலையில், தங்களது கலாச்சாரம் அழிந்து விடுமோ என்ற பயத்தில், ஜின்ஜியாங் அரசு அவர்களை கைது செய்து வருவதாக கூறப்படுகிறது.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close