பாரிஸில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த ஜப்பானியர் ஒருவர் தனது கையில் அணிந்திருந்த 5 கோடி மதிப்பிலான கைக்கடிகாரத்தை பறிகொடுத்துள்ளார்.
பிரான்ஸ் நாட்டின் தலை நகரான பாரிஸிற்கு சுற்றுலா வந்த ஜப்பானை சேர்ந்த ஒருவர் தன்னுடைய கையில் மிக விலையுயர்ந்த கைக்கடிகாரத்தை அணிந்திருந்துள்ளார். அவர் தங்கியிருந்த நட்சத்திர ஓட்டலுக்கு அருகில் நின்று கொண்டிருந்த மரம் நபர் ஒருவர் ஜப்பானியரிடம் சிகரெட் கேட்டுள்ளார்.
அதனை தொடர்து அந்த நபர் ஜப்பானியரை நெருங்கி பின்னர் எதிர்பாராத விதமாக ஜப்பானியரின் கையில் இருந்த விலையுயர்த்த கை கடிகாரத்தை பிடிங்கி சென்றுள்ளார். அந்த வாட்ஸின் விலை சுமார் 5 கோடி மதிப்புடையது என கூறப்படுகிறது. இது குறித்து பாரிஸ் காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துரையினர் அந்த திருடன் தவறவிட்ட கைபேசியை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
newstm.in