உள்நாட்டு விவகாரத்தில் தலையிட வேண்டாம் என பாகிஸ்தானுக்கு இந்தியா மீண்டும் எச்சரிக்கை

  அபிநயா   | Last Modified : 11 Oct, 2019 02:37 pm
post-unga-debacle-over-kashmir-munir-akram-replaces-maleeha-lodhi-as-pakistan-s-un-envoy

ஐம்மு காஷ்மீர் விவகாரத்தில் தலையிட வேண்டாம் என இந்தியா பல முறை எச்சரித்தும், அதை தொடர்ச்சியாக செய்து வரும் பாகிஸ்தான், தற்போது காஷ்மீர் குழந்தைகளின் நலன் குறித்து தவறான கருத்துக்கள் பரப்பி வருவதால், பாகிஸ்தானை, இந்தியா கடுமையாக எச்சரித்துள்ளது.

ஐக்கிய நாடுகளில் பாகிஸ்தானின் முன்னாள் பிரிதிநிதியான மலிஹா லோதி, காஷ்மீரில் குழந்தைகளுக்கு தவறான பாடங்கள் கற்பிக்கப்படுவதாகவும், இதனால் அவர்களின் எதிர்காலம் பெரிதாக பாதிக்கப்படும் எனவும் குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதிலளித்த ஐக்கிய நாடுகளில் இந்திய பிரதிநிதியான பௌலமி த்ரிபாதி, "உள்நாட்டு விவகாரத்தில் தலையிட வேண்டாம் என பல முறை எச்சரித்தும், பாகிஸ்தான் அதை தொடர்ச்சியாக செய்து வருவதோடு மட்டுமில்லாமல், தேவையற்ற தவறான கருத்துக்களையும் பரப்பி வருகிறது. 

குழந்தைகளுக்கு பிரிவினைவாதத்தையும், தவறான பாடங்களையும் கற்பிப்பது இந்தியாவா இஸ்லாமாபாதா என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இனியேனும், இந்தியாவின் விவகாரத்தில் தலையிடாமல் இருப்பதே பாகிஸ்தானுக்கு நல்லது" என்று கடுமையான முறையில் எச்சரிக்கை விடுத்துள்ளார் பௌலமி த்ரிபாதி.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close