ஈரான் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்

  அபிநயா   | Last Modified : 11 Oct, 2019 06:55 pm
iran-oil-tanker-hit-by-suspected-missile-strikes-near-saudi-port-ship-owner

ஈரானுக்கு சொந்தமான கச்சா எண்ணெய் கப்பல், செங்கடலில் வைத்து தாக்கப்பட்டதை தொடர்ந்து, அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

கடந்த வெள்ளியன்று, சவுதியின் ஜெட்டா துறைமுகத்துற்கு அருகே, ஈரானுக்கு சொந்தமான கச்சா எண்ணெய் கப்பல், ஏவுகணைகளால் தாக்கப்பட்டது. இதனால், தீபற்றி, கப்பலில் இருந்த எண்ணெய் முழுவதும் கடலில் கொட்டி விட்டதாக செய்திகள் கூறுகின்றன.

மேலும், கடந்த செப் 14 அன்று, சவுதி அரேபியாவின் எண்ணெய் கிணறுகளில் நடத்தப்பட்ட தாக்கதலில், ஈரான் நாட்டின் ஆதரவு பெற்ற ஹூதி கலகக்காரர்கள் ஈடுபட்டிருந்ததால், இந்த தாக்குதலில் ஈரான் நாட்டிற்கு தொடர்பிருப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வந்ததும், அதற்கு பதிலளித்த ஈரான், எங்கள் மீது தாக்குல் நடத்தும் நாட்டை முக்கியமான யுத்தகளமாக மாற்றிவிடுவோம் என கூறியதும் குறிப்பிடத்தக்கது.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close