நேபாளம் பேருந்து விபத்தில் 11 பேர் பலி

  அபிநயா   | Last Modified : 12 Oct, 2019 04:30 pm
11-died-in-a-bus-accident-in-nepal-s-kathmandu

நேபாளம் காத்மண்டுவில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 11 பேர் உயிரிழந்த நிலையில், 108 பேர் படுகாயமடைந்தனர்.

நேபாள நாட்டின் தலைநகரமான காத்மண்டு அருகே, மலைப்பகுதியிலிருந்து கீழறங்கிக்கொண்டிருந்த பேருந்து, தடுமாறி பள்ளத்தாக்கில் விழுந்தது. இந்துக்களின் பண்டிகை கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள, காத்மண்டுவிலிருந்து சிந்துபால் சௌக்கிற்கு, அப்பேருந்தில் இருந்தவர்கள், பயணம் மேற்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

இந்த விபத்தில், ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், 5 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாகவும் கூறப்படுகின்றது. 11 பேர் உயிரிழந்த நிலையில், 108 பேர் படுகாயமடைந்துள்ளனர். 

விபத்தின் காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், நேபாளத்தின் சாலைகள் ஒழுங்கற்று இருப்பதால் அங்கே அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாக சுற்று வட்டாரங்களில் வசிக்கும் மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close