எதிர்ப்பார்த்தை விட அதிகம் நேரம் தொடர்ந்தது இரு தலைவர்களின் உரையாடல் - அயலுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே

  அபிநயா   | Last Modified : 12 Oct, 2019 05:48 pm
both-the-leaders-had-a-very-deeper-and-lengthier-conversation-vijay-gokhale

"இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜீ ஜின்பிங்கும் நாங்கள் எதிர்ப்பார்த்தை விட பல மணிநேரம் உரையாடினர்" எனக் கூறியுள்ளார் இந்திய அயலுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே.

மோடி மற்றும் ஜின்பிங்கின் சந்திப்பை தொடர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்தார் இந்திய அயலுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே.

"ஜம்மு காஷ்மீர் விவகாரம் குறித்த பேச்சே இரு தலைவர்களின் உரையாடலின் போது எழவில்லை. இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் தான் காஷ்மீர் பிரச்சனை என்பதில் சீனாவும் தெளிவாக உள்ளது என்பதை இதிலிருந்து எங்களால் உணர முடிந்தது. 

இருநாட்டு வளர்ச்சி குறித்து மட்டுமில்லாமல், சர்வதேச பிரச்சனைகளான பருவநிலை மாற்றம், பயங்கரவாதம், பிரிவினைவாதம், வறுமை ஒழிப்பு ஆகியவை குறித்தும் அவரிகள் கலந்துரையாடினர்.

வுஹான் மாநாடு இருநாடுகளின் நட்புறவுக்கு வழிவகுத்ததாகவும், இந்த சந்திப்பு இரு தலைவர்களின் நட்புறவை வலுப்படுத்தியுள்ளதாக சீன அதிபர் ஜின்பிங் கூறியது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இருதலைவர்களும், நாங்கள் எதிர்ப்பார்த்தை விட அதிகம் நேரம் உரையாடினர். இது இந்தியாவுக்கு கிடைத்த மிக பெறும் வெற்றியாகும்" என்று மகிழ்ச்சியாக கூறினார் விஜய் கோகலே.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close