ஆப்கானிஸ்தான் மசூதியில் குண்டுவெடிப்பு - 62 பேர் உயிரிழப்பு!!

  அபிநயா   | Last Modified : 18 Oct, 2019 09:46 pm
blast-at-afghan-mosque-kills-62-during-prayers-say-officials

ஆப்கானிஸ்தான் நன்கர்ஹார் நகரின் மசூதியில் இன்று ஏற்பட்ட குண்டு வெடிப்பில், வெள்ளிக்கிழமை பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த 62 பேர் உயிரிழந்தனர்.

ஆப்கானிஸ்தான் நன்கர்ஹார் நகரின் மசூதியில் ஏற்பட்ட குண்டு வெடிப்பினால், காலை பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த 62 பேர் உயிரிழந்ததுடன் பலரும் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல்கள் கூறிகின்றன.

இந்த சம்பவம் குறித்து கூறிய நன்கர்ஹார் நகர கவர்னர் அத்தாஹூல்லா கோக்யானி, "இந்த குண்டு வெடிப்பினால் 62 பேர் உயிரிழந்த நிலையில், பலரும் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு பின் யார் இருக்கிறார்கள் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்களினால் மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருவதாக ஐ.நா. அறிவிப்பு விடுத்திருந்த சில தினங்களில் இந்த தாக்குதல் ஏற்பட்டிருப்பது மிகவும் வருத்தமாக உள்ளது" என்று அவர் கூறியுள்ளார்.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close