பாகிஸ்தானில் தொடர்ந்து வரும் கட்டாய மதமாற்றம் !!

  அபிநயா   | Last Modified : 18 Oct, 2019 10:10 pm
another-hindu-girl-abducted-and-converted-to-islam-in-pakistan-s-sindh

பாகிஸ்தானின் கராச்சி நகரில், இந்து மதத்தை சேர்ந்த மற்றொரு பெண், முஸ்லீம் மதத்திற்கு, கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டதாக அவரது குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர்.

கடந்த மாதம், பல் அறுவை சிகிச்சையில் இளங்கலை பட்டம் படித்துக்கொண்டிருந்த சீக்கிய மதத்தை சேர்ந்த நம்ரித்தா சாந்தினி என்ற இளம்பெண், கழுத்தில் துணி வைத்து இறுக்கப்பட்ட உயிரிழந்த நிலையில், அவரது இறப்பு தற்கொலை இல்லை, கொலை என அப்பெண்ணின் குடும்பத்தினர் புகார் அளித்திருந்ததை தொடர்ந்து, மதத்தின் பேரில் இந்துக்கள் மீது நடத்தப்படும் வன்முறையை கண்டித்து கராச்சி நகரில் பெரும் போராட்டங்களில் மக்கள் ஈடுபட்டிருந்தனர். 

இதை தொடர்ந்து, தற்போது, கராச்சி நகரில், ஒரு இந்து பெண்ணை, முஸ்லீம் இளைஞர் கட்டாய திருமணத்தின் பேரில் மதமாற்றம் செய்துள்ளதாக அந்த பெண்ணின் குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர்.

மேலும், பாகிஸ்தான் மனித உரிமை ஆணையத்தின் கணக்கெடுப்பின்படி, ஜனவரி 2004 முதல் மே 2018 வரை 7430 சிந்தி இனத்தைச் சேர்ந்த பெண்கள் மத தாக்குதலின் பேரில் கொல்லப்பட்டிருப்பது அந்நாட்டின் சிறுபான்மை மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close