பிரதமரைச் சந்தித்தார் அபிஜித் பேனர்ஜி!!!

  அபிநயா   | Last Modified : 22 Oct, 2019 02:04 pm
pm-modi-meets-noble-laureate-abhijit-banerjee

2019 ஆம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற இந்தியர் அபிஜித் பேனர்ஜி மற்றும் பிரதமர் நரேந்திர மோடி இருவரும் இன்று நேரில் சந்தித்து பொருளாதாரம் குறித்த கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

2019 ஆம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அபிஜித் பேனர்ஜி, அவரது மனைவி எஸ்தர் டூஃப்லோ மற்றும் மெக்கேல் கிரெம் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. உலகளாவிய வறுமை ஒழிப்பு குறித்த அவர்களது ஆய்விற்காக இவ்வாண்டின் நோபல் பரிசு இவர்களுக்கு அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

1961 ஆம் ஆண்டு பிறந்த அபிஜித் பேனர்ஜி, இந்தியாவின் கொல்கத்தாவில் உள்ள பிரிசிடென்சி கல்லூரியிலும், டெல்லியில் உள்ள ஜேஎன்யூ பல்கலைக்கழகத்திலும் பயின்றவர். 1988 ஆம் ஆண்டு ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்துறையில் முனைவர் பட்டம் பெற்ற பேனர்ஜி, தற்போது மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். 

இந்திய-அமெரிக்கரனான அபிஜித், கடந்த 20 ஆண்டுகளாக தன் மனைவி எஸ்தர் டூஃப்லோ மற்றும் சக பேராசிரியர் மெக்கேல் கிரெம் உடன் வறுமை ஒழிப்பு குறித்து ஆய்வில் ஈடுபட்டுள்ளார்.

இதை தொடர்ந்து, இன்று (செவ்வாய்கிழமை) சந்தித்த பிரதமர் மோடி மற்றும் அபிஜித் பேனர்ஜி இருவரும், பொருளாதாரம் மற்றும் பல விஷயங்கள் குறித்த விரிவான கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்ததாக தகவல்கள் கூறுகின்றன. 

இந்த சந்திப்பை குறித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்த பிரதமர் மோடி, நோபல் பரிசாளர் அபிஜித் பேனர்ஜியை சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாகவும், பல விஷயங்கள் குறித்து இருவரும் உரையாடியதாகவும், அவரது சாதனைகள் மேலும் தொடர மனமாற வாழ்த்து தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

 

— Narendra Modi (@narendramodi) October 22, 2019

 

இது குறித்து பதிவிட்ட அபிஜித், பிரதமர் மோடியுடனான சந்திப்பு மகிழ்ச்சியளிப்பதாகவும், இந்தியாவின் பொருளாதாரம், பிரதமரது திட்டங்கள் என பல விஷயங்கள் குறித்து இருவரும் உரையாடியதாகவும் அவர் பதிவிட்டிருந்தார்.

பிரதமரின் திட்டங்கள் குறித்து பலமுறை இவர் விமர்சித்துள்ள போதும், இருவரது இன்றைய சந்திப்பு பயனுள்ளதாக அமைந்திருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

Newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close