நேபாள குடியரசுத் தலைவரை சந்தித்த ராம்நாத் கோவிந்த்!!

  அபிநயா   | Last Modified : 22 Oct, 2019 09:39 pm
ramnath-govind-meets-nepal-president

ஜப்பான் பயணம் மேற்கொண்டிருந்த இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், அங்கு வருகை புரிந்திருந்த நேபாள குடியரசுத் தலைவர் பித்யா த்வி பாந்தாரியுடன் இந்தியா-நேபாளம் வளர்ச்சி குறித்த கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்ததாக தகவல்கள் கூறுகின்றன.

இந்தியா-நேபாளம் ஆகிய இரு நாடுகளின் வர்த்தக உறவும் தற்போது மேம்பட்டு வரும் நிலையில், அதனை மேலும், மேம்படுத்தும் நோக்கத்துடன், ஜப்பான் வந்திருந்த நேபாள குடியரசுத் தலைவர் பித்யா த்வி பாந்தாரியுடன் இருநாடுகளின் வளர்ச்சி குறித்தும் கலந்துரையாடினார் ராம்நாத் கோவிந்த்.

இதன் மூலம், கடந்த 29 ஆண்டுகளில், ஜப்பான் பயணம் மேற்கொண்ட ஒரே இந்திய குடியரசுத் தலைவர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார் நாம்நாத் கோவிந்த்.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close