மதத்தின் பெயரில் கொடூரங்கள், பெண்கள் மீதான வக்கிரங்கள் ஆகியவற்றின் உருவகமே பாகிஸ்தான் : ஃபாத்திமா கல் குற்றச்சாட்டு!!!

  அபிநயா   | Last Modified : 23 Oct, 2019 04:21 pm
pakistan-never-respects-their-own-citizens-fathima-gul

அமெரிக்காவில் நடைபெற்ற சர்வதேச வெளியுறவு குழு சந்திப்பில் உரையாற்றிய சிந்தி-அமெரிக்க மனித உரிமை ஆர்வலரான ஃபாத்திமா கல், பாகிஸ்தானில் மேற்கொள்ளப்படும் மத துன்புறுத்தல்கள் குறித்தும் மனித உரிமை அத்துமீறல்கள் குறித்தும் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

"மத துன்புறுத்தல்களும், மனித உரிமை அத்துமீறல்கள்களும் பாகிஸ்தானில் பல ஆண்டுகளாக நடந்துக் கொண்டுதான் இருக்கின்றன. பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் 6வது இடத்தில் உள்ள பாகிஸ்தான், சிறுபான்மை இனத்தவருக்கு எள்ளளவும் முக்கியத்துவம் அளிப்பதில்லை. எனக்கு தெரிந்த வரை தனது சொந்த மக்களுக்கு எதிராகவே செயல்படும் ஒரே அரசு பாகிஸ்தான் அரசாக தான் இருக்கும்" எனக் கூறி பாகிஸ்தானை வெகுவாக குற்றஞ்சாட்டியுள்ளார் ஃபாத்திமா.

மேலும், கடந்த சில நாட்களாக அந்நாட்டில் மேற்கொள்ளப்பட்டுவரும் கட்டாய மதமாற்றம் குறித்தும், அதை பற்றி பேச நேரம் இல்லாத அந்நாட்டின் மீடியாவையும் கடுமையாக தாக்கியுள்ளார்.

கடந்த 2018ஆம் ஆண்டின், முதல் 6 மாதங்களிலேயே, சுமார் 1000 சிறுபான்மை இனத்தை சேர்ந்த பெண்கள் கட்டாய மதமாற்றத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் போலீஸ் அறிக்கை தகவல்கள் கூறுகின்றன. ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில், மனித உரிமைகளை மதிக்காமல் முடிவு எடுத்திருப்பதாக இந்தியாவை குற்றம் சுமத்தி வந்த பாகிஸ்தானிற்கு, தற்போதைய ஃபாத்திமா கல்-ன் குற்றச்சாட்டு பெரும் ஏமாற்றத்தை அளித்திருக்கக்கூடும்.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close