கையெழுத்திடப்பட்ட கர்தார்பூர் ஒப்பந்தம்!!

  அபிநயா   | Last Modified : 24 Oct, 2019 04:59 pm
india-pakistan-sign-agreement-on-kartarpur-corridor

உலக புகழ்பெற்ற சீக்கியர்களின் புனித தலமான கர்தார்பூர் வழித்தடத்தை, நடைமுறைப்படுத்தும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது இந்தியா பாகிஸ்தான்.

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள தேரா பாபா நானக் கோவிலையும், பாகிஸ்தானின் தர்பார் சாஹிப் குருத்வாராவையும் இணைக்கும் வழித்தடமான கர்தார்பூர், சீக்கியர்களின் புனித தலமாக கருதப்படுகிறது. 

இந்நிலையில், இந்தியா பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளும், இன்று, கர்தார்பூருக்கு அருகில் உள்ள ஜீரோ பாய்ன்ட் எனப்படும் இடத்தில் வைத்து, இந்த வழித்தடத்தை நடைமுறைப்படுத்தும் ஒப்பந்தத்தில் தற்போது கையெழுத்திட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 

இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட பின்னர் பத்திரிக்கையாளர்களை சந்தித்த, மத்திய உள்துறை அமைச்சகத்தின் துணை செயலாளர் எஸ்.சி.எல். தாஸ் கூறுகையில், காலை முதல் மாலை வரை இயங்கப்படும் இந்த வழித்தடம், குறிப்பிட்ட சில நாட்கள் தவிர, ஆண்டின் மற்ற எல்லா நாட்களிலும் இயக்கப்படும் எனவும் அங்கு வருகை புரியும் மக்களுக்கு அனைத்து விதமான வசதிகள் செய்து தருவதாக பாகிஸ்தான் அரசு உறுதியளித்துள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும், இந்தியாவிலிருந்து கர்தார்பூர் செல்லும் மக்கள் நுழைவுச் சான்றதழ் மட்டும் சமர்ப்பித்தால் போதும் என பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.

கர்தார்பூர் புனித தலத்திற்கு யாத்திரை மேற்கொள்ள விரும்பும் இந்தியர்கள், http://prakashpurb550.mha.gov.in என்ற ஆன்லைன் வலைதளத்தில் சென்று பதிவு செயலாம் என்றும்  எஸ்.சி.எல். தாஸ் கூறியுள்ளார்.

தற்போது கையெழுத்திடப்பட்டுள்ள இந்த ஒப்பந்தத்தை தொடர்ந்து, வரும் நவம்பர் 9 அன்று, பிரதமர் நரேந்திர மோடி கர்தார்பூர் வழித்தடத்தை, திறந்து வைக்கவுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரகம் செய்தி வெளியிட்டுள்ளது.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close