கின்னஸ் சாதனை பட்டியலில் அயோத்தியா தீப உத்சவம்!!

  அபிநயா   | Last Modified : 27 Oct, 2019 06:45 am
ayodhya-deepotsav-scripts-new-guinness-world-record-over-6-lakh-diyas-lit-up-saryu-banks

உத்திரபிரதேச மாநில அயோத்தியாவில் முன்றாவது முறையாக கொண்டாடப்படும் தீப உத்சவத்திற்காக சுமார் 6 லட்சம் தீபங்கள் ஏற்றப்பட்டு, கின்னஸ் சாதனை பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

கடந்த முறை கொண்டாடப்பட்ட தீபோத்சவத்தில் சுமார் 3 லட்சம் தீபங்கள் ஏற்றப்பட்டிருந்ததை தொடர்ந்து, இம்முறை 6 லட்சம் தீபங்கள் ஏற்ற முடிவு செய்த உத்திரப்பிரதேச அரசு கின்னஸ் சாதனை புரிந்துள்ளது. அயோத்தியாவின் தீப உத்சவத்தை கண்டுகளிக்க உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மக்கள் குவிந்துள்ளனர். சரயு நதிக்கரை வண்ண விளக்குகளால் ஜொலித்துக் கொண்டிருக்கிறது. 

உத்திரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆர்த்தி எடுத்து தீபோத்சுவத்தை தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து, பல மாநிலங்களில் இருந்தும் அயோத்தியா வந்திருந்த கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

அதை தொடர்ந்து உரையாற்றிய அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், "கடந்த முறை 3 லட்சம் தீபங்கள் ஏற்றிக் கொண்டாடினோம். இம்முறை 6 லட்சம் தீபங்கள் ஏற்றி உலக சாதனை புரிந்துள்ளோம். இதற்கு முன்னர் பணியாற்றிய தலைவர்கள் அயோத்தியா வரவே அஞ்சினர். ஆனால் நான் எனது இரண்டரை வருட பதவி வாழ்க்கையில் 18 முறை அயோத்தியா வந்துள்ளேன். ஒவ்வொரு முறை வரும் பொழுதும் புது புது திட்டங்களுடன் வந்துள்ளேன். ராமரின் பிறப்பிடமான இந்த புனித தலத்தை கின்னஸ் சாதனையில் இடம்பெற வைத்த மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறினார்.

Newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close