சிலி அதிபருக்கு எதிரான மக்கள் போராட்டம்!!

  அபிநயா   | Last Modified : 27 Oct, 2019 11:29 am
over-a-million-protesters-demand-chile-president-s-resignation

சிலி நாட்டின் பொருளாதார நிலையை கண்டித்து, அந்நாட்டின் அதிபர் செபஸ்டியன் பினராவிற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் அந்நாட்டு மக்கள்.

அமெரிக்ககண்டத்தில் அமைந்துள்ள சிலி நாட்டின் அதிபரான செபஸ்டியன் பினராவிற்கு எதிராக, அவர் பதவி விலக வேண்டும் என்று கூறி அந்நாட்டு மக்கள் வெள்ளிக்கிழமை அன்று, அவருக்கு எதிராக கோஷம் எழுப்பியும், பாட்டுகள் பாடியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டிக்கும் மக்கள் கூறுகையில், "நாங்கள் அரசிடமிருந்து பெரிதாக எதையும் எதிர்பார்க்கவில்லை. தனியார் நிறுவனங்களை குறைத்து விட்டு, அரசு சார் நிறுவனங்களை அதிகப்படுத்துவதற்காகவும், நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றமடைய செய்வதற்காகவும் தான் நாங்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்" என்று கூறினர்.

இந்த போராட்டதிற்கு பதிலளித்திருக்கும் சிலி அதிபர் செபஸ்டியன் பினரா, "மக்களின் அமைதியான போராட்டம் எனக்கு பல விஷயங்களை கற்று தந்துள்ளது. அவர்களின் இந்த முயற்சியினால் நான் எனது திட்டங்களை மாற்றியமைக்க முடிவு செய்துள்ளேன். இனி அவர்களது பாதையில் செல்வதே எனது விருப்பம்" என்று கூறியுள்ளார்.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close