அபு பக்கர் அல் பக்தாதியின் மரணத்தை தொடர்ந்து உலகம் பாதுகாப்பாக இருக்கும் - ட்ரம்ப் அறிவிப்பு!!

  அபிநயா   | Last Modified : 28 Oct, 2019 09:38 pm
isis-chief-abu-bakr-al-baghdadi-dead-donald-trump

அமெரிக்க ராணுவ படைகள் சிரியாவின் பரிஷா பகுதியில் மேற்கொண்ட தாக்குதலில், ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தின் தலைவனான அபு பக்கர் அல் பக்தாதி, கோழைத்தனமாக தன் உயிரை மாய்த்து கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர், சிரியாவின் ஐஎஸ் பயங்கரவாதிகளை முற்றிலுமாக ஒழித்து விட்டதால் துருக்கி எல்லையில் இருக்கும் அமெரிக்க படைகளை வாபஸ் வாங்க உள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்திருந்தார்.

இவரின் எச்சரிக்கையும் மீறி, துருக்கி நாட்டு எல்லைக்கு அருகில் அமைந்துள்ள சிரிய எல்லை பகுதியில் முகாமிட்டு செயல்பட்டு வரும் அந்நாட்டின் சிறுபான்மை இனத்தவரான குர்தீஷ் மக்கள் மீது துருக்கி ராணுவம் தாக்குதல் மேற்கொண்டு வந்தது. இந்நிலையில், அமெரிக்க ராணுவ படைகள், சிரியாவின் பரிஷா பகுதியில் அமைந்திருக்கும் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தின் தலைவனான அபு பக்கர் அல் பக்தாதி வீட்டில் தாக்குதல் மேற்கொண்டிருந்தனர் இதை தொடர்ந்து, ராணுவ வீரர்களின் தாக்குதலினால் உயிரிழக்க விரும்பாத அபு பக்கர், தான் வைத்திருந்த வெடிகுண்டை செயல்படுத்தி, தன் மூன்று மகன்களுடன் தற்கொலை செய்து கொண்டதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

மேலும், அபு பக்கரின் மரணத்தை தொடர்ந்து, உலகம் பாதுகாப்பான நிலையை எட்டியுள்ளதாகவும் கூறியுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்.

கடந்த 2010ஆம் ஆண்டு முதல், ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைவனாக இருந்து, பல குண்டு வெடிப்புகளுக்கும், தாக்குதல்களுக்கும், ஆயிரக்கணக்கான உயிரிழப்புகளுக்கும் காரணமாக இருந்த அபு பக்கர் அல் பக்தாதி சர்வதேச நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்துள்ளார் என்பதும், சிரியாவில், ஆளும் அரசுக்கு எதிராக கொடூரமான வன்முறைகளில் ஈடுபட்டு வந்த பயங்கரவாத அமைப்பான ஐஎஸ்ஐஎஸ், ஓசாமா பின்லாடனுக்கு அடுத்த படியான மிகப்பெரிய பயங்கரவாத இயக்கம் ஆக கருதப்பட்டு வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close