சமையலறையில் கண்டுகொள்ளாமல் இருந்த இயேசு கிறிஸ்துவை கேலி செய்வது போன்ற ஓவியம்...எவ்வளவு விலைக்கு போனது தெரியுமா?

  Newstm Desk   | Last Modified : 30 Oct, 2019 10:31 pm
painting-like-mocking-jesus-christ-in-the-kitchen-do-you-know-how-expensive-it-is

சமையலறையில் இருந்த ஒரு பழைய ஓவியம், ஏலத்தில் 26.6 மில்லியன் டாலருக்கு விற்கப்பட்ட சம்பவம் பிரான்சில் நடந்தேறியுள்ளது.

பிரான்ஸின் கோம்பின் நகரில் 90 வயதுடைய மூதாட்டி வீட்டின் சமையலறையில் இயேசு கிறிஸ்துவை கேலி செய்வது போன்ற ஒரு ஓவியம் நீண்ட நாட்களாக இருந்துள்ளது. இந்த ஓவியம் 13ஆம் நூற்றாண்டின் இத்தாலிய ஓவியர் சிமாபுவால் உருவாக்கப்பட்டது. இந்த ஓவியத்தின் உண்மையான மதிப்பு குறித்து 90 மூதாட்டிக்கு தெரியவில்லை. தனது சமையலறையில் ஒரு சமையல் ஹாட் பிளேட்டுக்கு மேலே ஓவியத்தை அவர் தொங்கவிட்டிருந்தார்.

ஒருநாள் புதிய வீட்டிற்கு மாறுவதற்கு முன்பு, பழைய பொருட்களை ஏலத்தில் விடுபவரின் கண்ணில் இந்த ஓவியம் தென்பட்டுள்ளது. உடனடியாக அதன் மதிப்பை உணர்ந்த அவர், அந்த ஓவியத்தை மதிப்பீட்டிற்கு ஒரு நிபுணரிடம் எடுத்து செல்ல வேண்டும் மூதாட்டியிடம் தெரிவிக்க, அதற்கு அவர் சம்மதம் தெரிவித்தார்.

இதையடுத்து, பாரிஸில் உள்ள ஆக்டியோன் ஏல மாளிகையில், ஒருவருக்கு இந்த ஓவியம்  26.6 மில்லியன் டாலருக்கு விற்கப்பட்டது. 

”இது தனித்துவமான, அற்புதமான மற்றும் நினைவுச்சின்னமான ஒரு ஓவியம். சிமாபூ மறுமலர்ச்சியின் தந்தை ஆவார். ஆனால் இந்த விற்பனை எங்கள் கனவுகளுக்கு அப்பாற்பட்டது” என்று ஏல மாளிகை தெரிவித்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close