திருந்தாத பாகிஸ்தானின் கருத்துக்களுக்கு பதிலடி கொடுக்கும் பௌலமி த்ரிபாதி!!

  அபிநயா   | Last Modified : 01 Nov, 2019 09:49 pm
paulomi-tripathi-hits-pakistan-for-spreading-rumours-about-indian-territory

ஜக்கிய நாடுகளின் பொது சபை குழு சந்திப்பில், காஷ்மீர் விவகாரத்தை மீண்டும் இழுத்த பாகிஸ்தானிற்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில், இந்தியாவின் பிரதேசங்களுள் ஒன்றான ஜம்மு காஷ்மீரை, சர்வதேச பிரச்சனையாக சித்தரிக்க முயல்வதற்கு பாகிஸ்தானின் பேராசை தான் காரணம் என்று கூறியுள்ளார் பௌலமி த்ரிபாதி.

ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை திரும்ப பெற்ற இந்தியாவின் முடிவிற்கு எதிராக தொடர்ந்து குரல் எழுப்பி வந்த பாகிஸ்தான், கடந்த செப் 27., அன்று அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற  ஐக்கிய நாடுகளின் பொது சபை மாநாட்டிலும் இந்தியாவுக்கு எதிரான தன் கருத்தை முன்வைத்தது. 

அது போதாதென்று, அக்டோபர் மாதம் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் குழு சந்திப்பில், பாகிஸ்தானின் முன்னாள் பிரிதிநிதியான மலிஹா லோதி, காஷ்மீரில் குழந்தைகளுக்கு தவறான பாடங்கள் கற்பிக்கப்படுவதாகவும், இதனால் அவர்களின் எதிர்காலம் பெரிதாக பாதிக்கப்படும் எனவும் இந்தியாவுக்கு எதிராக தவறான கருத்தை முன் வைத்திருந்தார்.

இதற்கு பதிலளித்த ஐக்கிய நாடுகளில் இந்திய பிரதிநிதியான பௌலமி த்ரிபாதி, "குழந்தைகளுக்கு பிரிவினைவாதத்தையும், தவறான பாடங்களையும் கற்பிப்பது இந்தியாவா இஸ்லாமாபாதா என்பது அனைவரும் அறிந்த ஒன்றே என்று கூறியதோடு, இந்தியாவின் விவகாரத்தில் தலையிடாமல் இருப்பதே பாகிஸ்தானுக்கு நல்லது என்ற கடுமையான எச்சரிக்கையும் விடுத்திருந்தார்.

இதை தொடர்ந்து, நேற்று (வியாழன்) நடைபெற்ற ஜக்கிய நாடுகளின் பொது சபை குழு சந்திப்பில் உரையாற்றிய பாகிஸ்தானின் முன்னாள் பிரிதிநிதியான மலிஹா லோதி, காஷ்மீர் மக்கள் தங்களின் சுயமரியாதை மற்றும் சுய உரிமைக்காக போராடி வருவதாக குறிப்பிட்டிருந்தார்.

அவரின் இந்த கருத்துக்கு, "இந்தியாவின் பெயரை கெடுபதற்கென இதுவரை ஐக்கிய நாடுகளின் குழு சந்திப்பில் பேசப்படாத ஜம்மு காஷ்மீரை பற்றி பாகிஸ்தான் தவறான கருத்துக்களை தொடர்ந்து முன் வைத்து வருகிறது. இந்தியாவின் பிரதேசங்களுள் ஒன்றான ஜம்மு காஷ்மீரை, சர்வதேச பிரச்சனையாக சித்தரிக்க முயல்வதற்கு பாகிஸ்தானின் பேராசை தான் காரணம்" என்று கூறியுள்ளார் பௌலமி த்ரிபாதி.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close