"சவாஸ்டீ பிரதமர் மோடி" நிகழ்வில் பிரதமர் மோடி!!

  அபிநயா   | Last Modified : 02 Nov, 2019 07:07 pm
pm-modi-arrives-at-bangkok-stadium

மூன்று நாள் அரசு முறை பயணமாக தாய்லாந்து சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, தற்போது பாங்காக்கில் நடைபெற்று கொண்டிருக்கும், ‘சவாஸ்டீ பிரதமர் மோடி’ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நிமிபுத்தூர் அரங்கத்தை வந்தடைந்துள்ளார்.

தாய்லாந்து நாட்டிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடியை பெருமை படுத்தும் விதமாக, இன்று பாங்காக்கின் நிமிபுத்தூர் அரங்கத்தில், "சவாஸ்டீ பிரதமர் மோடி" என்ற நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது தாய்லாந்து அரசு. 

இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்காக தற்போது நிமிபுத்தூர் அரங்கம் வந்தடைந்துள்ள பிரதமர் மோடி, தாய்லாந்தில் வசித்து வரும் இந்தியர்களை கண்டு அவர்களுடன் உரையாடவுள்ளார்.

 

 

இந்நிலையில், அவரை காண்பதற்காக திரல் திரலான இந்தியர்கள் நிமிபுத்தூர் அரங்கத்தில் குவிந்துள்ளனர். மோடியை காண்பதற்காக வருகை புரிந்திருக்கும் இந்த மக்கள் கூட்டம் தங்களுக்கு மகத்தான உற்சாகத்தை அளிப்பதாக பிரதமர் அலுவலகம் தங்களது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close