சவாஸ்டீ பிரதமர் மோடி நிகழ்வு : தாய்லாந்து இந்தியர்களை சந்தித்த பிரதமர்!!

  அபிநயா   | Last Modified : 02 Nov, 2019 08:04 pm
doesn-t-feel-as-though-am-in-foreign-land-pm-modi-in-bangkok

மூன்று நாள் அரசு முறை பயணமாக தாய்லாந்து சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, பாங்காக்கில் இன்று நடைபெற்று கொண்டிருக்கும், ‘சவாஸ்டீ பிரதமர் மோடி’ நிகழ்ச்சியில் தாய்லாந்தில் வசிக்கும் இந்தியர்களை கண்டு உரையாற்றினார்.

"2019ஆம் ஆண்டின் தேர்தலை தொடர்ந்து, என் முதலாவது தாய்லாந்து பயணம் இது. அயல்நாட்டில் உள்ளபோதும், இங்குள்ள மக்களின் அன்பும் அரவணைப்பும் என் இந்திய மண்ணில் இருக்கும் உணர்வை எனக்கு அளிக்கிறது. தாய்லாந்துடனான இந்தியாவின் உறவு வரலாற்று சிறப்பு மிக்கது. இந்தியாவில் மேற்கொள்ளப்படும் அனைத்து திட்டங்கள் குறித்தும் உலகளவில் உள்ள இந்தியர்கள் அனைவருக்கும் தெரிந்திருக்க வேண்டும். ஏனெனில், உலகின் கடைக்கோடியில் வசிக்கும் இந்தியனுக்குள்ளும் ஓர் இந்தியா உள்ளது" என்று குறிப்பிட்டு உலகளவில் வசிக்கும் இந்தியர்களை பெருமை படுத்தும் வகையில் உரையாற்றியுள்ளார் பிரதமர் மோடி.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close