‘ஹெச் 1 பி’ விசா அதிகம் பெற்றுள்ள நிறுவனங்கள் பட்டியல்:  முதல் 10 இடங்களில் உள்ள நிறுவனங்கள் எவை தெரியுமா?

  அபிநயா   | Last Modified : 05 Nov, 2019 07:58 pm
google-amazon-tcs-among-top-10-recipients-of-h-1b-visas-in-fy19

அமெரிக்கா வெளியிட்டுள்ள 2019 ஆம் நிதி ஆண்டிற்கான ஹெச் 1 பி விசா அதிகம் பெற்றுள்ள நிறுவனங்கள் பட்டியலில், முதல் 10 இடங்களில் கூகுள் அமேசான் டிசிஎஸ் ஆகிய நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.

குடியேற்ற உரிமை அல்லாது, பணி ரீதியாக அமெரிக்க செல்பவர்களுக்கு தற்காலிக அனுமதியளிக்கும் விசா ஹெச் 1 பி விசா என்றழைக்கப்படும். இதில் குறிப்பிட வேண்டியது என்னவென்றால், அமெரிக்கா ஆண்டிற்கு 85,000 ஹெச் 1 பி விசாக்களை வழங்குகிறது. அதில் 70 சதவீத விசாக்கள், இந்திய தகவல் தொழில்நுட்ப பணியாளர்கள் மற்றும் அமெரிக்க நிறுவனங்களுக்காக வேலை செய்யும் இந்தியர்களுக்கு வழங்கப்படுகிறது. 

இந்நிலையில், அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகளுக்கான அமைப்பு தற்போது வெளியிட்டுள்ள 2019 ஆம் நிதி ஆண்டிற்கான ஹெச் 1 பி விசா அதிகம் பெற்றுள்ள நிறுவனங்கள் பட்டியலில் பேஸ்புக், ஆப்பிள், கூகுள், அமேசான், டிசிஎஸ் ஆகிய நிறுவனங்கள் முதல் 10 இடங்களில் இடம் பிடித்துள்ளன.

ஹெச் 1 பி விசா அதிகம் பெற்றுள்ள நிறுவனங்களில் இந்தியாவின் டிசிஎஸ்-ஐ தொடர்ந்து, டெக் மகேந்திரா நிறுவனம் இடம் பெற்றுள்ளது. மேலும், இந்த பட்டியலின் முதல் 10 இடங்களில், 7 இடங்களில் அமெரிக்க நிறுவனங்களின் பெயர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் ஆட்சியில், 2019ஆம் நிதி ஆண்டில் தான், அதிகமான ஹெச் 1 பி விசாக்கள் வழங்கப்பட்டுள்ளதாக அமெரிக்க குடியுரிமை அமைப்பை சேர்ந்த ஒருவர் கூறியுள்ளார்.

Newstm.in

 

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close