இந்தியாவை தாக்க முயற்சித்த ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு - அமெரிக்கா திடீர் தகவல்!!!

  அபிநயா   | Last Modified : 06 Nov, 2019 01:35 pm
islamic-state-khorasan-planned-suicide-attack-in-india-in-2018-top-us-counterterrorism-official

ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தின் தலைவனான அபு பக்கர் அல் பக்தாதி உயிரிழந்துவிட்ட போதிலும், அந்த அமைப்பினால் உலக நாடுகளுக்கு உள்ள அச்சுறுத்தல்கள் இனியும் மாறவில்லை என்ற திடுக்கிடும் தகவலை முன்வைத்துள்ளது அமெரிக்க பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பு.

அமெரிக்க பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பின் தலைவரான ரசல் ட்ராவர்ஸ், ஐஎஸ்ஐஎஸ்-ன் அனைத்து வகை அமைப்புகளும் உலகிற்கு அச்சுறுத்தல்தான் என்றாலும், அதன் ஐஎஸ்ஐஎஸ்-கே அமைப்பு சர்வதேச அளவில் மிகப்பெரிய அச்சுறுத்தலாகும். இவர்கள் ஆப்கானிஸ்தான் மட்டுமல்லாது, உலகின் பல நாடுகளிலும் தாக்குதல்கள் மேற்கொள்ள திட்டமிட்டு வருகின்றனர்" என்று கூறியுள்ளார்.

மேலும், உலக அளவில் 20 கிளைகளுக்கு மேல் கொண்டுள்ள இந்த ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு, கடந்த ஆண்டு, நம் நாட்டின் மீது தாக்குதல் மேற்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு தோல்வியுற்றது என்ற திடுக்கிடும் தகவலையும் கூறியுள்ளார் ரசல் ட்ராவர்ஸ்.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close