இஸ்ரேல் : பயங்கரவாதிகள் மீது நிச்சயமாக மறுதாக்குதல் மேற்கொள்ள வேண்டும் - பாதுகாப்பு அமைச்சர் அவி டிச்சர்!!

  அபிநயா   | Last Modified : 14 Nov, 2019 07:40 pm
deputy-dm-avi-dichter-we-need-to-launch-war-on-gaza

பாலஸ்தீனிய இஸ்லாமிய ஜிகாத் அமைப்பின் தலைவரான பஹாத் அபு அல் அடாவின் மரணத்தை தொடர்ந்து, இஸ்ரேல் நாட்டில் மேற்கொள்ளப்படும் தாக்குதல்களுக்கு lதக்க பதிலடி அளிப்பதற்காக, நிச்சயமாக மறுதாக்குதலில் ஈடுபட வேண்டும் என்ற கருத்தை முன்வைத்துள்ளார் அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சரான அவி டிச்சர்.

ஈரானின் உதவியுடன், இஸ்ரேலுக்கு எதிராக பல பயங்கரவாத தாக்குதல்களும், ஏவுகணை தாக்குதல்களும் மேற்கொண்டிருந்த இஸ்லாமிய ஜிகாத் அமைப்பின் தலைவரான பஹாத் அபு அல் அடா, அந்நாட்டின் அமைதிக்கு மிகபெரும் அச்சுறுத்தலாக இருந்து வந்தததை தொடர்ந்து, அவர் மீது தாக்குதல் மேற்கொண்டிருந்த இஸ்ரேல் அரசு அவரை கொன்றுவிட்டது. 

இஸ்ரேலின் இந்த செயலை தொடர்ந்து, கடந்த இரண்டு நாட்களாக,  ஆஷ்கிலான், ஆஷ்தோத், கிதேரா போன்ற பகுதிகளில் தொடர்ந்து தாக்குதல் மேற்கொண்டு வருகின்றனர் பயங்கரவாதிகள். இந்த தாக்குதலினால் அப்பாவி இஸ்ரேலிகள் பாதிப்புக்குள்ளவதை தொடர்ந்து, ஆத்திரமடைந்த அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹூ, தாக்குதல்களை இத்துடன் நிறுத்தி கொள்ளவில்லையெனில் மிகபெரிய அளவில் பதிலளிக்க வேண்டியிருக்கும் என்ற கடுமையான எச்சரிக்கையை விடுத்திருந்தார்.

இவரை தொடர்ந்து அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சரான அவி டிச்சர், காசா மீது போர் புரிவதுதான் பயங்கரவாதிகளின் தாக்குதல்களை நிறுத்துவதற்கான வழி என்று கூறியுள்ளார். இஸ்லாமிய ஜிகாத் அமைப்பின் தலைவரான பஹாத் அபு அல் அடாவின் மரணம் இஸ்ரேலில் மேற்கொள்ளப்பட்டு வந்த பயங்கரவாதத்திற்கு முடிவாக அமையாது என்றும், இது வெறும் தொடக்கம் தான் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பயங்கரவாதம் என்பது வெறும் சுமூக பேச்சுக்களினால் முடிவுக்கு கொண்டுவரப்படும் விஷயம் இல்லை என்று கூறியுள்ள இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் அவி டிச்சர், மறுதாக்குதல் என்பதில் இறங்க சிறிது காலம் எடுத்துகொள்ளப்பட்டாலும், பயங்கரவாதிகளை வேறோடு அழிப்பதே வெற்றியாக அமையும் என்ற தனது கருத்தையும் முன்வைத்துள்ளார்.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close