இஸ்ரேலை அழிக்க துடிக்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு!!!

  அபிநயா   | Last Modified : 16 Nov, 2019 06:27 pm
we-have-thousands-of-traps-we-will-crush-tel-aviv-hamas-leader

இஸ்ரேல் நாட்டில் சில நாட்களாக மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் ஏவுகணை தாக்குதல்களை தொடர்ந்து, ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவரான யஹ்யா சின்வார் இஸ்ரேலை முழுவதுமாக அழித்து விடுவதாக மிரட்டியுள்ளார்.

பாலஸ்தீனிய இஸ்லாமிய ஜிகாத் அமைப்பின் தலைவரான பஹாத் அபு அல் அடாவின் மரணத்தை தொடர்ந்து, கடந்த சில நாட்களாக இஸ்ரேலில் ஏவுகணை தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், கடந்த நவம்பர் 4ஆம் தேதி இஸ்ரேலை முழுவதுமாக அழிக்கும் திறன் ஹமாஸ் அமைப்பிற்கு உள்ளது என்று இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் அமைப்பின் தலைவரான யஹ்யா சின்வார்.

இஸ்ரேல், கடந்த சில நாட்களாக 430க்கும் மேற்பட்ட ஏவுகணைகளின் தாக்குதல்களுக்கு உள்ளாகி வருகிறது. இதனால் 50க்கும் மேற்பட்ட இஸ்ரேலி மக்கள் காயமடைந்துள்ளனர். இந்நிலையில், தங்களிடம் ஆயிரக்கணக்கான ஏவுகணைகள் உள்ளதாகவும், இஸ்ரேலின் எந்த தாக்குதல்களுக்கும் அஞ்சாது ஹமாஸ் அமைப்பு என்றும் குறிப்பிட்டுள்ளார் அமைப்பின் தலைவரான யஹ்யா சின்வார் .

மேலும், மறுதாக்குதலில் ஈடுபட இஸ்ரேல் முயற்சித்தால் அதற்கான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார் யஹ்யா சின்வார்.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close