பாலஸ்தீனிய பகுதிகளில் இஸ்ரேலின் குடியேற்றங்கள் சட்டத்திற்கு புறம்பானவை - ஐ.நா மனித உரிமை அலுவலகம்!!!

  அபிநயா   | Last Modified : 19 Nov, 2019 05:02 pm
u-n-rights-office-says-israeli-settlements-remain-unlawful

ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் பாலஸ்தீனிய பகுதிகளில், இஸ்ரேல் மேற்கொள்ளவிருப்பது சட்ட விரோதமான செயல் என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமை அலுவலகம் கூறியுள்ளது.

பாலஸ்தீனியாவின் ஆக்கிரமிப்பு பகுதிகளில் குடியேற்றங்களை ஏற்படுத்த தங்களுக்கு உரிமை இருப்பதாக கூறியிருந்தது இஸ்ரேல். அதன் கருத்துக்கு அமெரிக்காவின் டொனால்ட் ட்ரம்ப் அரசும் ஆதரவு தெரிவித்திருந்தது. இந்நிலையில், இஸ்ரேலின் இந்த செயல் சட்டத்திற்கு புறம்பானது என்றும், ஓர் நாட்டின் சட்டத்திட்டங்கள் மாற்றியமைக்கப்படுகிறது என்கிற காரணத்திற்காக, சர்வதேச சட்டத்திட்டங்களை எக்காரணம் கொண்டும் மாற்றவோ, மீறவோ கூடாது என்று கூறியுள்ளார் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை குழு பேச்சாளர் ரூபர்ட் கால்வில்லி.

இதன் மூலம், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்-ன் கருத்துக்கு எதிராக கருத்து தெரிவித்தது மட்டுமல்லாமல், நீண்ட நாட்களாக தான் முன்வைத்து வரும் நிலைபாட்டை உறுதி செய்திருக்கும் ஐ.நா., மனித உரிமை அலுவலகம், தனது நடுநிலைமையை வெளிப்படுத்தியுள்ளது.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close