சிங்க சவாரி செய்ய கிர் பூங்கா போகலாமா?

  Shalini Chandra Sekar   | Last Modified : 20 Apr, 2018 10:57 am


ஆசிய சிங்கங்களுக்குப் பெயர் போனது குஜராத்திலுள்ள கிர் தேசியப் பூங்கா. இந்தப்பூங்கா இந்திய அளவில் மட்டுமல்லாமல், ஆசிய அளவில் பெயர் பெற்றது. இதன் பரப்பளவு மொத்தம் 1412 சதுர கி.மீ பரப்பளவு. மே 2015-ல் மேற்கொண்ட் 14வது ஆசியச் சிங்கங்களின் கணக்கெடுப்பின்படி, கிர் தேசியப் பூங்காவில் 523 சிங்கங்கள் உள்ளன. அவற்றில் ஆண் சிங்கங்கள் 109, பெண் சிங்கங்கள் 201 மற்றும் 213 குட்டி சிங்கங்கள். காட்டின் ராஜாவான சிங்கத்தின் மீது காதல் கொன்டவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய இடம் இது. 

எப்படி செல்வது? 

ஜுனாகத் சிட்டிக்கு அருகாமையில் தான் இந்த கிர் தேசியப்பூங்கா உள்ளது. எல்லா பெரிய நகரங்களையும் இணைக்கும்படி ஜுனாகத் ரயில்வே ஸ்டேஷன் அமைந்துள்ளது. சென்னையிலிருந்து குஜராத்துக்கு சராசரியாக 2.30 மணி நேர பயணம், கட்டணம் சராசரியாக 4300. குஜராத்திலிருந்து 4 மணி நேரத்தில் பூங்காவை அடைந்து விடலாம்.சென்னையிலிருந்து டிரெயின்கள் இல்லை.  


என்ன செய்யலாம்?

சிங்கத்தின் மீது சவாரி செய்யலாம், சுற்றியுள்ள அணைகளில் படகு சவாரி போகலாம். 

என்னவெல்லாம் பார்க்கலாம்?

காட்டுப் பன்றிகள், புள்ளிமான், கடம்பை மான், இந்தியச் சிறுமான், மலைப் பாம்புகள், முதலைகள், காட்டு மாடுகள் ஆகியனவைகளும் இங்கு உள்ளன.


பார்வை நேரம்? 

ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 16-ம் தேதியிலிருந்து ஜூன்-15 வரை இந்த கிர் பூங்கா செயல்படும். காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரையும், மாலை 3 மணியிலிருந்து 6 மணி வரையும் பார்வையாளர்களுக்கு அனுமதி உண்டு. 6 இந்தியர்கள் பயணம் செய்யும் ஜீப்பிற்கு 4000 ரூபாயும், 6 வெளிநாட்டுக்காரர்களுக்கு 10000 ரூபாய் கட்டணமும் வசூலிக்கப் படுகிறது. 

எங்கு தங்குவது? 

கிர் ஜங்கிள் ரிசார்ட், தி கேட் வே ஹோட்டல், அணில் ஃபார்ம் ஹவுஸ் மற்றும் சில தங்குமிடங்கள் பூங்காவுக்கு அருகில் உள்ளன. 

பக்கத்தில் இருக்கும் மற்ற இடங்கள்? 

கங்கை மாதா கோயில், ஜம்ஜிர் அருவி, மஹல் காடுகள், கமலேஷ்வர் டேம் இவைகள் எல்லாம் கிர் தேசியப்பூங்காவைச் சுற்றி 30 கி.மீ-க்குள் இருக்கின்றன. 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.