இயற்கையும் ஆன்மிகமும்: பத்ரிநாத் பயணம்

  Newstm Desk   | Last Modified : 19 Apr, 2018 11:32 pm

இயற்கையுடன் இணைந்த ஆன்மிகத்தை விட மன நிம்மதியை தரும் ஒன்று எதுவாக இருக்கும். அப்படி பட்ட அனுபவத்தை தரும் இடம் இந்தியாவின் வடக்கில் அமைந்திருக்கும் பத்ரிநாத். 

உத்ரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் இருக்கும் புனித நகரம் பத்ரிநாத். நார் மற்றும் நாராயண் மலைத் தொடர்களுக்கு இடையே அமைந்திருக்கிறது. இமயமலையின் வடக்கில் அதி உயரத்தில் இந்தியா மற்றும் திபெத்திய எல்லையில் இருக்கும் பத்ரிநாத்தில் நின்று சுற்றி எங்கு பார்த்தாலும் வெள்ளை போர்வை போர்த்தி அழகு காட்டுகின்றன மலைத்தொடர்கள். இந்தியாவின்

4 திசைகளில் இருக்கும் இந்துக்களின் 4 புனித தளங்களில் பத்ரிநாத்தும் ஒன்று. கடல் மட்டத்திலிருந்து 3133 மீட்டர் உயர்த்தில் அலக்நந்தா ஆற்றங்கரையில் அமைந்துள்ள இந்த இடத்திற்கு வருடா வருடம் லட்சக்கணக்கில் பயணிகள் வந்து செல்கின்றனராம். 

அப்படி என்ன சிறப்பு இந்த பகுதிக்கு?

வரலாறு: 

7ம் நூற்றாண்டில் ஆதி சங்கராசார்யா தனது இமயமலை பயணத்தின் போது அலக்நந்தா ஆற்றில் பத்ரிநாத்தின் சிலையை கண்டெடுக்கிறார். அதை டாப்ட் குந் பகுதிக்கு அருகே இருக்கும் குகைக்குள் வைத்து பராமரிக்க தொடங்குகிறார். காலப்போக்கில் அந்த இடம் கோயிலாக மாறுகிறது. பின்னர் 16ம் நூற்றாண்டில் இந்த சிலையை கர்வால் அரசர் தற்போது இருக்கும் இடத்திற்கு மாற்றினார். இன்று உலகம் முழுவதிலும் இருந்து ஆண்டுதோறும் பல பக்தர்கள் வந்து பிரார்த்திக்கும் புனித தளங்களில் ஒன்றாகி இது உள்ளது.

இந்த இடத்தில் விஷ்ணு நரசிம்ம அவதாரம் எடுத்தார். அதனால் தான் பத்ரிநாத்திற்கு இரு புறமும் இருக்கும் மலைத்தொடருக்கு அப்பெயர் சூட்டப்பட்டுள்ளது.  பத்ரி என்றால் இலந்தை பழம் என்று அர்த்தம். விஷ்ணு தியானம் செய்ய அமைதியான பகுதியை தேடி பின்னர் இந்த பகுதியை வந்தடைந்துள்ளார். தியானத்தில் முழ்கிய விஷ்ணு அந்த பகுதியில் குளிர் அதிகமாக இருப்பதையும் அது தன் உடலை பலவீனமாக்குவதையும் மறந்துவிட்டார். எனவே புயலில் இருந்து அவரை காப்பாற்ற இலந்தைமரமாக உருவேடுத்து லட்சுமி தேவி வந்துள்ளார். லட்சுமியின் செயலை பார்த்த விஷ்ணு இந்த பகுதிக்கு பத்ரிக்காஷ்ரம் என்று பெயரிட்டார். எனவே இந்துக்களின் புனித புத்தகங்களில் பதாரி, பதாரிக்காஷ்ரம் என்று பத்ரிநாத் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இது விஷ்ணு வாழும் பகுதி என்று நம்பப்படுவதால் இந்த பகுதிக்கு பத்ரிநாத் என்று பெயர் வந்துள்ளது. நாத் என்றால் அரசன் என்று பொருள்.

எப்படி செல்வது:

சென்னையில் இருந்து பத்ரிநாத்துக்கு 2605 கிலோ மீட்டர் தூரம். சாலை வழியாக 42 மணி நேர பயணத்தல் அங்கு செல்லலாம். சென்னையிலிருந்து டெல்லி அல்லது டேராடூனுக்கு விமானம் வழியாக சென்று பின்னர் அங்கிருந்து சாலை மற்றும் ரெயில் மூலம் பயணிக்கலாம். விமான டிக்கெட்டுகள் ரூ. 4000 முதல் ரூ. 9000 விற்கப்படுகின்றது.  

டெல்லியில் இருந்து ரிஷிகேஷ்க்கு 287 கிலோ மீட்டர் ரெயில் பயணம் மேற்கொண்டு பின்னர் அங்கிருந்து சாலை வழியாக 297 கிலோ மீட்டர் பயணத்தில் பத்ரிநாத் சென்றடையலாம். மேலும் 297 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் ரிஷிகேஷ் ரெயில் நிலையத்திலிருந்து மும்பை, டெல்லி, லக்னோ, லூதியான பகுதிகளுக்கு செல்லலாம். டெல்லியில் இருந்து ரிஷிகேஷ்க்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

செல்ல தகுந்த காலம்:

இந்த பகுதியின் வானிலை காரணமாக ஏப்ரல் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை மட்டுமே பத்ரிநாத் கோயிலுக்கு செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். மே மாதத்தில் 11 டிகிரி செல்சியஸ் வெப்பம் இருக்கும். வருடம் முழுவதும் பனிப்பொழிவு இருப்பதால் தெற்கில் இருந்து செல்பவர்களுக்கு இது முழுக்கவே வித்யாசமான அனுபவமாக இருக்கும்.

செல்ல வேண்டிய இடங்கள்:

பத்ரிநாத்துக்கு செல்லும் வழியில் ஹெம்குந்த் சாஹிப் என்ற பகுதியை பார்த்து செல்வதை பக்தர்கள் வழக்கமாக வைத்துள்ளனர். மேலும் அந்த வழயில் கர்ணபிரயாக், நந்தபிரயாக், விஷ்ணுபிரயாக் மற்றும் பண்டுகேஷ்வ் ஆகியவை அமைந்துள்ளன. பத்ரிநாத்துக்கு அருகே சடோபந்த் முக்கோன ஏரி, நாரத குந்த், ஷெஷ்நேத்ரா, பிரம்ம கபல் உள்ளிட்ட சுற்றுலா தளங்கள் அமைந்துள்ளன.

கோடைக்காலத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் இங்கு வருவதால் முன்னரே தங்குவதற்கான இடத்தை முடிவு செய்து விட்டு செல்வது நல்லது. அப்பகுதிகளில் விடுதிகளை தவிர பயணிகள் தங்குவதற்கு ஆசிரமங்களும் அமைக்கப்பட்டு உள்ளன. சில ஆசிரமங்களில் ஒரு நாளைக்கு ரூ.100 மட்டுமே வசூலிக்கப்படுகின்றது. 

மிக முக்கியமான புனித தளங்களில் ஒன்றாக இப்பகுதி கருதப்படுவதால் சைவ உணவுகளே கிடைக்கும். ரிஷிகேஷ் பகுதியின் எல்லையில் அசைவ உணவுகளுக்கு அனுமது உண்டு. பத்ரிநாத்திற்கு செல்லும் வழி ஆபத்தும் சுவாரஸ்யங்களும் நிரம்பியவை.

இயற்கையின் இன்னல்களும் பேரழகும் சேர, பத்ரிநாத் பயணம் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்றாக அமையும். 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.