இந்தியாவின் நயாகரா பத்தி உங்களுக்கு தெரியுமா?

  Shalini   | Last Modified : 04 May, 2018 07:37 pm


'கடவுளின் சொந்த நாடான' கேரளாவைப் பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. மற்ற ஊர்களில் குறிப்பிட்ட சில இடங்கள் மட்டும் சுற்றுலா தலமாக இருக்கும். ஆனால் கேரளாவில் இந்த விதி பொருந்தாது, மொத்த மாநிலமும் சுற்றிப் பார்க்க வேண்டிய இடம் தான். அதில் ஒன்று தான் 'அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி'. திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சாலக்குடி தாலுக்காவில் இந்த அதிரப்பள்ளி நீர் வீழ்ச்சி உள்ளது. 

மேற்குத்தொடர்ச்சி மலையில் உருவாகி ஓடி வரும் சாலக்குடி ஆற்றின் பாதையில் கண்ணைக் கவரும் வெண் திரையாக நமக்குக் காட்சியளிக்கிறது. 

பார்ப்பதற்கு நயாகராவின் குட்டி வடிவம் போன்றே காட்சியளிப்பதால் ‘இந்தியாவின் நயாகரா’ எனும் விசேஷப் பெயரும் இதற்கு உண்டு. இதன் உயரம் 80 அடி. நீர்வீழ்ச்சியை சுற்றியுள்ள பல்வேறு தளங்களிலிருந்து வெவ்வேறு கோணத்தில் இதன் அழகை நாம் ரசிக்கலாம்.


பாறைகளில் வழிந்து சிதறும் வெண்ணிற பரப்பு நீரா, புகையா, ஆவியா, மேகமா, பஞ்சுப்பொதியா என்றெல்லாம் நம்மை மனம் தடுமாற வைக்கும் அமானுஷ்யத்துடன், பிரதேசம் முழுதும் எதிரொலிக்கும் ஆங்கார ஓசையுடன் இந்த நீர்வீழ்ச்சி வழிகிறது. அதுதான் இயற்கையின் குரலா என்று கூட நீங்கள் வியக்கக்கூடும்.

கமல்ஹாசன் நடித்த 'புன்னகை மன்னன்' திரைப்படம் இங்கு தான் எடுக்கப் பட்டது. அதன் பின்னர் இந்த அருவி 'புன்னகை மன்னன்' அருவி என்றே தமிழ்நாட்டில் அழைக்கப் படுகிறது. தவிர 'இருவர்' படத்தில் வரும் 'நறுமுகையே நறுமுகையே' பாடலிலும், ராவணன் படத்திலும் இந்த நீர் வீழ்ச்சி இடம் பெற்றுள்ளது. 

எப்படி போவது?

சென்னையிலிருந்து தினம் நிறைய ரெயில்கள் திருச்சூர் வழியாக செல்கின்றன. நான் ஏ.சி ஸ்லீப்பரில் 370 ரூபாய் தான். அங்கிருந்து ஒரு மணி நேரத்தில் இந்த அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியை அடையலாம். 

பக்கத்தில் இருக்கும் மற்ற இடங்கள்?

சோட்டானிக்கரை கோயில், வேம்பநாடு அணை, வழச்சல் அருவி மற்றும் பல. 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.