ஃபேஸ்புக்கில் டேட்டிங் வசதியை பெறுவது எப்படி?

  ஹரிணி விஜயன்   | Last Modified : 26 Sep, 2018 05:16 pm
facebook-comes-up-with-the-option-of-dating

ஃபேஸ்புக்கில் பல வசதிகள் உள்ளதை அடுத்து, டேட்டிங் செய்யும் வசதியும் வரவுள்ளதாக மே மாதத்தில், அதன் முதன்மை செயல் அதிகாரி மார்க் ஸக்கர்பர்க் அறிவித்தார். அதற்கான பரிசோதனை கொலம்பியாவில் தற்போது நடைபெற்று வருவதாகவும், சோதனை வெற்றி பெற்றதையடுத்து, கூடிய விரைவில் அனைவரும் இந்த வசதியை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே டின்டர், பம்பில் போன்ற டேட்டிங் ஆப்ஸ் இளைஞர்களிடையே அதிகமாக பரவி வரும் நிலையில், அதையெல்லாம் விட அதிக பயன்படுத்துவோர் உள்ள ஃபேஸ்புக்கில், டேட்டிங் செய்யும் வசதி வருவது பிற டேட்டிங் ஆப்புகளுக்கு போட்டியை அளிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. 

இதில், மூன்றாம் பாலினரும் பதிவு செய்யும் வாய்ப்பு உள்ளது. தம் விருப்பங்களை 100 பேருக்கு மேல் ஒரு நாளில் பகிர முடியாது. ஸ்டாக்கிங் செய்வோர்களை தடுக்கும் வகையில் இந்த டேட்டிங் அம்சம் இருக்கும். எனவே, தங்களுக்கு பதில் அளிக்காதோரை பின்தொடர இயலாது, புகைப்படங்களையும், மெஸ்ஸேஜுகளையும், தனியாக பகிர இயலாது. தம் நண்பர்களுக்கு காமிக்கும் ப்ரோஃபைலை, டேட்டிங் செய்வோருக்கு காட்டாது. முற்றிலும் தனியான ஒன்றாக அது இருக்கும். 

ஃபேஸ்புக்கில் அனைவரின் ப்ரொபைலிலும் மேலே ஹார்ட் குறியீடு வரும். அதில் ஒருவரைப் பற்றிய முதன்மை விவரங்கள், மதம், கல்வி, அலுவலகம், உயரம், போன்ற தேவையான சில விவரங்களை மட்டும் பதிவு செய்யலாம். அவ்விவரங்களை பதிவு செய்தோரின் ப்ரோபைல்கள் தனியாக காட்டும். அதன் மூலமாக உங்களுக்கு பிடித்தோருடன் பேசிப் பழகலாம்.  

பயன்படுத்துவோர், யாருக்கு இந்த விவரங்களை பகிரலாம் என்பதையும் தேர்வு செய்யலாம். நண்பர்களின் நண்பர்கள் மற்றும் அறிமுகம் இல்லாதோர், குறிப்பிட்ட ஊர்களில் உள்ளோர் போன்றவற்றை தேர்வு செய்து தொடர்பு கொள்ளலாம். தனிப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் வசதியும் இதில் உள்ளது. மேலும், இது மெஸ்சேன்ஜர் ஆப்பை விட மிக பாதுகாப்பான ஒன்றாகவே இருக்கும்.

இக்காலத்தில், உறவுகளுக்குள் பிரிவு, சண்டை போன்ற பல பிரச்சனைகள் ஃபேஸ்புக் மூலமாக வரும் நிலையில், இந்த டேட்டிங் வசதி நீண்டநாள் உறவுகளை தேடி கொடுக்கும் நோக்கத்தோடு வடிவமைக்கப்பட்டுள்ளதாக மார்க் ஸக்கர்பர்க் கூறுகிறார்.
newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close