தை பொங்கல் ஸ்பெஷலாக அரிசி தேங்காய் பாயசம்! சூப்பர் காம்பினேஷன்

  சாரா   | Last Modified : 15 Jan, 2020 05:59 pm
pongal-receipe-delicious-rice-coconut-payasam

எந்தப் பண்டிகையாக இருந்தாலும், மெனுவில் தவறாமல் பாயாசம் இடம் பிடித்து விடும். பொங்கல் பண்டிகையிலும் சர்க்கரைப் பொங்கலுக்கு அடுத்து சுவையான பாயாசம் தான் அனைவரின் விருப்பமும். இந்தப் பொங்கலுக்கு வித்தியாசமாக அதே நேரம் சுவையான அரிசி தேங்காய் பாயசம் செய்து அனைவரையும் அசத்தலாம்.

தேவையான பொருட்கள்:

துருவிய தேங்காய் - 1/2 கப் 

பச்சரிசி - 3 டேபிள் ஸ்பூன் 

வெல்லம் - 1/2 கப் 

காய்ச்சிய பால் - 1/4 கப் 

தண்ணீர் - 2 1/2 கப் 

நெய் - 2 டீஸ்பூன் 

ஏலக்காய் பொடி - 1/4 டீஸ்பூன் 

முந்திரி - 15 

உலர் திராட்சை - 20

செய்முறை :

ஒரு பாத்திரத்தில் வெல்லத்தை தட்டிப் போட்டு, லேசாக சூடேற்றி வெல்லம் கரைந்ததும், அதனை வடிகட்டிக் கொள்ள வேண்டும்.அரிசியை நன்றாக கழுவி, சுமார் 30 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். அரிசி நன்றாக ஊறியதும் மிக்சியில் போட்டு அதனுடன் தேங்காய் சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ள வேண்டும். 

ஒரு அடிகனமாக பாத்திரத்தை அடுப்பில் வைத்து சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு கொதித்ததும், அதில் அரைத்து வைத்துள்ள அரிசி கலவையைப் போட்டு, நெருப்பைக் குறைத்து, கைவிடாமல் நன்கு கிளறி விட வேண்டும். கலவையானது ஓரளவு மென்மையாகி கெட்டியானதும், அதில் வெல்லப் பாகு சேர்த்து, 5 நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும். பின் அதில் பொடித்த ஏலக்காய் பொடி சேர்த்து தொடர்ந்து கிளறி விட வேண்டும். மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி காய்ந்ததும், அதில் முந்திரி, உலர் திராட்சை சேர்த்து நன்கு வதக்கி விட்டு, அதனை பாயாசத்துடன் சேர்த்து இறக்க வேண்டும். சுவையான அரிசி தேங்காய் பாயாசம் ரெடி.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close