நெடுஞ்சாலைகளில் மதுபானக்கடைகளை அகற்ற உத்தரவு

  mayuran   | Last Modified : 15 Dec, 2016 12:43 pm
சாலையோர மதுக்கடைகளில் குடித்துவிட்டு வாகனம் ஒட்டுவதால் விபத்து ஏற்படுகிறது. எனவே தேசிய, மாநில நெடுஞ்சாலையில் உள்ள மதுபானக்கடைகளை அகற்ற கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று போடப்பட்டது. இம்மனு மீதான இன்றைய விசாரணையின் போது, நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளின் லைசன்ஸ் மார்ச் 31 வரை மட்டுமே செல்லும் என்றும், நெடுஞ்சாலையில் இருந்து 500மீட்டர் தொலைவில் எந்த மதுக்கடைகளும் இருக்கக் கூடாது எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. பழைய லைசன்ஸ்களை புதுப்பிக்க கூடாது என்றும் புதிய லைசன்ஸ்கள் வழங்க கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 1 ஆம் தேதிக்கு பின்னர் கண்டிப்பாக மதுக்கடைகள் திறந்திருக்க கூடாது மீறியும் திறந்திருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளது. இந்த உத்தரவு மாநில அரசு, யூனியன் பிரதேசங்களுக்கும் பொருந்தும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close