இனி விமான நிலையங்களில் லக்கேஜ்களுக்கு ‘டேக்’(tag) கிடையாது

Last Modified : 15 Dec, 2016 05:55 pm
விமான நிலையங்களில் இன்று முதல் பயணிகள் கொண்டு செல்லும் கைப்பைகளுக்கு அடையாள அட்டை(tag) தேவை இல்லை என மத்திய விமான போக்குவரத்து துறை கூறியுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகளால் பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்தை குறைக்கும் விதமாக மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சில பரிந்துரைகளை மத்திய விமான போக்குவரத்து துறைக்கு கூறியுள்ளனர். அதன் படி இன்று முதல் விமான பயணிகள் கொண்டு செல்லும் கைப்பைக்கு அடையாள அட்டை வழங்கப்பட மாட்டாது. முதல்கட்டமாக சென்னை, பெங்களூர், ஹைதராபாத், அகமதாபாத், மும்பை, கொல்கத்தா, புதுடெல்லி ஆகிய ஏழு விமான நிலையங்களில் நடைமுறைக்கு வருகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close