விமானப்படையில் தாடி வளர்க்க கூடாது- உச்ச நீதிமன்றம்

  நந்தினி   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
அன்சாரி அப்தப் அஹ்மத் என்பவர் தாடி வளர்த்தற்காக கடந்த 2008-ம் ஆண்டு விமான படையில் இருந்து நீக்கப் பட்டார். இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அவர் தொடர்ந்த வழக்கில், சீக்கியர்கள், சிங் போன்றவர்களுக்கு அவர்கள் மத வழக்கப் படி தாடி வளர்க்க, நீண்ட முடி வைத்துக் கொள்ள உரிமை உள்ளது. அதேபோல் தாடி வளர்ப்பது என் மத உரிமை அந்த உரிமையை எனக்கு வழங்க வேண்டும், என தெரிவித்திருந்தார். இதற்கு பதில் மனு தாக்கல் செய்திருந்த இந்திய விமானப்படை, முஸ்லீம் மதத்தில் தாடி வளர்ப்பது கட்டாயம் அல்ல. அது அவர் அவர் விருப்பம் சார்ந்தது. சர்வதேச அளவில் தாடி வைக்க வேண்டும் என்ற நியமம் இல்லை, என கூறியிருந்தது. இன்று உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தாக்கூர் முன்பு விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், விமானப் படையில் தாடி வைக்க கூடாது என சொல்லி இருப்பது மத சுதந்திரத்தில் தலையிடுவது போல் தோன்றவில்லை. ஓழுக்கம் மற்றும் சமநிலையை பின்பற்ற கடைபிடிக்கப் படும் உடை கட்டுப்பாடு குற்றச்செயல் அல்ல, என கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close