டிஜிட்டல் பண பரிவர்த்தனையை ஊக்குவிக்க ரூ. 340 கோடி பரிசுத்தொகை

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
இந்தியா முழுவதிலும் டிஜிட்டல் முறையில் பண பரிவர்த்தனை நடைபெறுவதற்காகவும், இதுபற்றிய விழிப்புணர்வை மக்களிடையே கொண்டு சேர்க்கும் விதமாகவும் National Institute for Transforming India(NITI) Aayog ரூ.340 கோடி பரிசுத்தொகை அறிவித்துள்ளது. இதன்படி, the Lucky Grahak Yojna என்ற பெயரில் வாடிக்கையாளருக்கும், Digi-dhan Vyapar Yojna என்ற பெயரில் வியாபாரிகளுக்கும் தனித்தனியே பரிசுத் திட்டங்களை கொண்டு வந்துள்ளது. இந்தப் பரிசானது அரசின் திட்டங்களான UPI, USSD, Aadhar Enabled Payment System (AEPS) மற்றும் RuPay cards முறைப்படி அதிக பரிவர்த்தனை செய்தவர்களை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து வழங்கப்படும். 50 ரூபாயிலிருந்து 3000 வரைக்கும் பரிவர்த்தனை செய்பவர்களுக்கு இது பொருந்தும். இதற்கான முதல் குலுக்கல் வரும் 25-ஆம் தேதி Christmas Gift என்ற பெயரில் தொடங்குகின்றது. அன்றிலிருந்து நாள் ஒன்றுக்கு 15 ஆயிரம் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யப்பட்டு ரூ.1000 பரிசுத்தொகையாகவும், வாரந்தோறும் 7 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டு ரூ.5 ஆயிரம், ரூ.10 ஆயிரம் மற்றும் ரூ.1 லட்சம் வரை பரிசுத் தொகை வழங்கப்படும். இதே போல், வியாபாரிகளுக்கும் ரூ.50 ஆயிரம் வரை பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 14-ல், அம்பேத்கர் பிறந்த நாளன்று மெகா பரிசுத் தொகையாக வாடிக்கையாளர்களுக்கு ரூ.1 கோடி, 50 மற்றும் 25 லட்சம் வரையிலும், வியாபாரிகளுக்கு ரூ.50, 25, 5 லட்சங்கள் வரை பரிசளிக்கப்படும். தனியார் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு மூலம் நடக்கும் பரிவர்த்தனைகள் இதில் செல்லாது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close