மீண்டும் ஆக்சிஸ் வங்கியில் ரெய்டு: 60 கோடி பிடிபட்டது

  shriram   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
டெல்லியில் உள்ள கானாக்ட் ப்ளேஸ் பகுதியில் உள்ள ஆக்சிஸ் வங்கி கிளையில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 20 போலி அக்கவுண்டுகளில் 60 கோடி ரூபாய் அளவுக்கு டெபாசிட் செய்யப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரூபாய் நோட்டு தடை செய்யப்பட்ட கடந்த நவம்பர் 8ஆம் தேதிக்கு பின், 600 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கக் கட்டிகளை ஒரு நகைக்கடைக்கார் விற்றதாக வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதுபற்றி விசாரித்தபோது, கானாக்ட் ப்ளேஸ் ஆக்சிஸ் வங்கி கிளையில் அந்த நபருக்கு அக்கவுண்ட்கள் இருந்தது தெரியவந்துள்ளது. அங்கு அவர் 20 அக்கவுண்டுகளில் 60 கோடி ரூபாய் வரை டெபாசிட் செய்திருந்தததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். ஏற்கனவே டெல்லியில் டிசம்பர் 5ஆம் தேதி, 40 கோடி ரூபாய் மதிப்பிலான பழைய நோட்டுக்களை மாற்ற முயன்ற இரண்டு ஆக்சிஸ் வங்கி மேலாளர்கள் கைது செய்யப்பட்டனர். கடந்த வாரம் மீண்டும் டெல்லியின் சாண்டி சவுக் பகுதியில் உள்ள ஆக்சிஸ் வங்கி கிளையில், 44 போலி அக்கவுண்டுகளில் 100 கோடி ரூபாயை டெபாசிட் செய்தது கண்டுபிடிக்கப் பட்டது. இந்த சம்பவங்களை தொடர்ந்து தனது கிளைகளில் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்ட 19 அதிகாரிகளை பணிநீக்கம் செய்துள்ளதாக ஆக்சிஸ் வங்கி தெரிவித்தது. தற்போது இந்த புதிய செய்தி அந்த வங்கியை மேலும் இக்கட்டான சூழ்நிலையில் தள்ளி இருக்கிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close