6 வருடங்களாக பாஜக இளைஞர் அணியின் தலைவராக இருந்த அனுராக் தாக்குர் அப்பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக வடக்கு மும்பை எம்.பி பூனம் மகாஜன்(36) நியமிக்கப் பட்டுள்ளார். இவர் மறைந்த பாஜக மூத்த தலைவர் பிரமோத் மகாஜனின் மகளாவார். இதேபோல் பாஜகவின் எஸ்.சி, எஸ்.டி, ஓபிசி மற்றும் விவசாயிகள் அணிக்கும் புதிய தலைவர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். பாஜகவின் தேசிய தலைவராக அமித்ஷா மீண்டும் தேர்ந்தெடுக்கப் பட்ட பின்னர் கட்சிக்குள் நடைபெற்ற பெரிய மாற்றம் இதுவாகும்.
சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.