நூதன முறையில் பிளிப்கார்ட்டிடம் ரூ.1.05 கோடி மோசடி செய்த இளைஞர்கள்

Last Modified : 16 Dec, 2016 10:20 am
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இன்ஜினியரிங் பட்டதாரியான தர்மராஜ் மீனா(20) மற்றும் பொறியியல் மாணவரான ராகுல் மீனா(20) ஆகிய இருவரும் இணைந்து நூதன முறையில் 1.05 கோடி ரூபாய் மதிப்புள்ள 152 ஸ்மார்ட் போன்களை பிளிப்கார்ட்டில் வாங்கி மோசடி செய்துள்ளனர். இவர்கள் இருவரும் வேறு பெயரில் கணக்குள் துவங்கி வேறு வேறு முகவரிகளில் மொபைல் போன்களை ஆர்டர் செய்து விட்டு பின்னர் மொபைல் வந்ததும் காலி பெட்டியை கொடுத்து ஏமாற்றி விட்டதாக கூறி பிளிப்கார்ட்டிடம் இருந்து பணத்தை திரும்ப பெற்றுள்ளனர். கடந்த ஒன்றரை வருடமாக இவ்வாறு ஏமாற்றி 152 போன்களை வாங்கி உள்ளனர். அவற்றின் மதிப்பு 1.05 கோடியாகும். இந்நிலையில் பணத்தை திரும்ப பெறுவதற்கு பயன்படுத்திய இரண்டு வங்கி கணக்குகள் ஒரே மாதிரியாக இருப்பதைக் கண்டு சந்தேகமடைந்த ப்ளிப்கார்ட் அதிகாரிகள் போலீசில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து விசாரணையில் இறங்கிய போலீசார் இந்த மோசடியை அம்பலப் படுத்தி உள்ளனர். கைது செய்யப் பட்ட இருவரும் 6 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப் பட்டுள்ளனர். இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்த மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close