டெல்லி : இளம்பெண் வன்புணர்வு ; ஒருவர் கைது

Last Modified : 16 Dec, 2016 10:16 am
நொய்டாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் நேற்று இரவு எய்ம்ஸ் பேருந்து நிறுத்தத்தில் டாக்ஸிக்காக காத்து நின்றுள்ளார். அப்போது உள்துறை அமைச்சகத்தின் ஸ்டிக்கர் ஒட்டிய கார் ஒன்றில் வந்த நபர் இளம்பெண்ணை அழைத்து செல்வதாக கூறியுள்ளார். அதனை நம்பி அப்பெண்ணும் காரில் எறியுள்ளார். மோட்டி பக் பகுதி அருகே வந்ததும் அந்த நபர் அப்பெண்ணை காரில் வைத்தே வன்புணர்வு செய்துள்ளார். உதவி கேட்டு அவர் கூச்சல் இடவே அந்த நபர் காரை விட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதையடுத்து அப்பகுதிக்கு வந்த ரோந்து போலீசார் இளம்பெண்ணை மீட்டுள்ளனர். மேலும் தப்பி ஓடிய கார் ஓட்டுனரையும் கைது செய்தனர். 2012-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி டெல்லியில் ஓடும் பேருந்தில் இளம்பெண் ஒருவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதன் நினைவு தினம் இன்று கடைபிடிக்கும் சமயத்தில் மீண்டும் நடந்துள்ள அதுபோன்ற சம்பவம் பெண்கள் பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close