ராகுல் காந்தி - மோடி சந்திப்பு

Last Modified : 01 Jan, 1970 05:30 am
செல்லா நோட்டு அறிவிப்பிற்கு பின்னர் பிரதமர் மோடியை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக சாடி வந்தார். நேற்று கூட பிரதமர் மோடியின் தனிப்பட்ட ஊழல் குறித்த தகவல்கள் தன்னிடம் இருப்பதாக கூறி குண்டை தூக்கிப் போட்டார். இந்நிலையில் இன்று பாராளுமன்றத்தில் உள்ள பிரதமரின் அறையில் அவரை சந்தித்து ராகுல் காந்தி பேசினார். உத்திரப் பிரதேச மாநிலத்தில் விவசாயிகள் படும் கஷ்டத்தை எடுத்துக் கூறி விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட கடன்களுக்கு சலுகை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இந்த சந்திப்பின் போது மூத்த காங்கிரஸ் நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close