மிஸ் இந்தியா வேர்ல்ட் பட்டம் வென்ற ஹரியானா பெண்

Last Modified : 26 Jun, 2017 09:06 am
பெமினா இந்திய உலக அழகி போட்டியில் ஹரியானாவை சேர்ந்த மனுஷி சில்லார் முதல் இடத்தை பிடித்தார். மும்பையில் நேற்று இரவு நடைபெற்ற இறுதி போட்டியை பாலிவுட் நட்சத்திரங்கள் கரண் ஜோகர் மற்றும் ரித்தேஷ் தேஷ்முக் தொகுத்து வழங்கினர். 2017-ஆம் ஆண்டின் உலக இந்திய அழகியாக மனுஷி தேர்ந்தெடுக்கபட்டார். இவரை தொடர்ந்து ஜம்மு காஷ்மீரை சேர்ந்த சனா துவா இரண்டாம் இடத்தையும், பீகாரின் பிரியங்கா குமாரி 3-ஆம் இடத்தையும் பிடித்தனர். 30 மாநிலங்களை சேர்ந்த பெண்கள் இப்போட்டியில் கலந்து கொண்டனர். வரும் ஜூலை 9-ஆம் தேதி கலர்ஸ் சேனலில் மதியம் 1 மணிக்கு இப்போட்டியானது ஒளிபரப்பட உள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close