அமெரிக்க, ஜப்பான் போர்க்கப்பல்கள் சென்னை வருகை

Last Modified : 10 Jul, 2017 05:24 pm
1992ம் ஆண்டு இந்திய அமெரிக்க நாடுகள் இணைந்து "மலபார்" என்ற கடற்படை கூட்டுப் பயிற்சிக்கான உடன்படிக்கையை செய்து கொண்டன. இதன்பின் ஜப்பான் 2007ம் ஆண்டு இந்த உடன்படிக்கையில் இணைந்தது. இதன்படி, மூன்று நாடுகளும் இணைந்து அரபிக்கடல் மற்றும் வங்கக் கடலில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இது ஜூலை 7 முதல் 17ம் தேதி வரை நடைபெறும். கடற்படையை வலிமைப்படுத்தவும், எதிரி நாடுகளின் அச்சுறுத்தலை சமாளிக்கவும், இந்த பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக அமெரிக்கா மற்றும் ஜப்பானைச் சேர்ந்த இரண்டு போர்க்கப்பல்கள் நேற்று சென்னை துறைமுகத்திற்கு வந்துள்ளன. இதற்கு இந்திய கடற்படை அதிகாரிகள் பெரும் வரவேற்பை அளித்துள்ளனர். மொத்தம் 22 கப்பல்கள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. கடலில் உளவு பார்ப்பது, நீர்மூழ்கி கப்பல் போர் பயிற்சி, கடலில் கப்பல் சேதத்தை தவிர்ப்பது, கடலில் மிதக்கும் வெடி பொருட்களை கண்டுபிடித்து அழிப்பது, கடலில் மூழ்குவோரை தேடுவது மற்றும் மீட்பது உள்ளிட்ட பல பயிற்சிகளில் ஈடுபடுகின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close