வீடு தேடி வரும் தட்கல் டிக்கெட்

Last Modified : 01 Jan, 1970 05:30 am
திடீர் ரயில் பயண சூழ்நிலைகளின் போது ரயில் டிக்கெட்டை எளிதில் பெற தட்கல் முறையை ஐ.ஆர்.சி.டி.சி அறிமுகப்படுத்தியது. இந்த முறையில் டிக்கெட்களை பதிவு செய்யும் போது, டிக்கெட் உறுதியாகும் முன்னரே அதற்கான கட்டணத்தை கட்டாயம் செலுத்தியாக வேண்டும். சில நேரங்களில் டிக்கெட் கிடைக்கவில்லை என்றால், செலுத்திய கட்டணத்தை திரும்ப பெற 15 நாட்களுக்கு மேல் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை நிலவியது. தற்போது, இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் விதமாக தட்கல் டிக்கெட்டை வீட்டிற்கு வந்து டெலிவரி செய்யும் முறையை ஐ.ஆர்.சி.டி.சி அறிமுகப்படுத்தி உள்ளது. சாதாரண டிக்கெட் முன்பதிவுகளுக்கு மட்டும் அளிக்கப்பட்டு வந்த இந்த சேவையானது தற்போது தட்கல் முறைக்கும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதில் டிக்கெட்டை புக் செய்து, அது உறுதியாகிவிட்டால் வீட்டிற்கே வந்து டிக்கெட் டெலிவரி செய்யப்படும். டிக்கெட்டை பெற்றுக் கொண்ட பின்னர் அதற்கான கட்டணத்தை பணமாகவோ, கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலமாக செலுத்திக் கொள்ளலாம். தட்கல் முறையில் ஒரு நாளைக்கு 1 லட்சத்திற்கும் மேற்பட்ட டிக்கெட்கள் பதிவு செய்யப்படுகின்றன.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close