இலவச காஸ் இணைப்பு திட்டத்திற்கு அடுத்த மாதம் 30ந் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு !!

Last Modified : 01 Jan, 1970 05:30 am
பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவை வல்லரசு நாடாக்க பல்வேறு நல திட்டங்களை தினமும் வகுத்துக்கொண்டு தான் இருக்கிறார். தூய்மை இந்தியா திட்டம், 2022-க்குள் அனைவருக்கு வீடு, பிரதமர் முத்ரா வங்கித் திட்டம் போன்ற பல்வேறு நல திட்டங்களால் இந்தியா முன்னோக்கி சென்றாலும் மக்களின் ஒத்துழைப்பு சற்று மந்த நிலையிலேயே உள்ளது என சொல்லலாம். கடந்த ஆண்டு வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் குடும்பங்களுக்கு இலவசமாக சமையல் கியாஸ் இணைப்பு வழங்கும் வகையில் 'பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா' என்ற திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கினார். இந்த திட்டத்தின் மூலம் 5 கோடி ஏழை குடும்பங்களுக்கு இலவச கியாஸ் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த திட்டத்தினை 3 ஆண்டுகளுக்குள் செய்து முடிக்க கால அவகாசம் வரையறுக்கப்பட்டது. மேலும் இந்த திட்டத்துக்கு விண்ணப்பிப்போர் தங்கள் விண்ணப்பத்துடன் ஆதாரை இணைக்க வேண்டும் அல்லது மே 31ந் தேதிக்குள் ஆதாருக்கு விண்ணப்பித்து அதற்கான பதிவு அட்டை அல்லது விண்ணப்ப நகலை கேஸ் இணைப்பு விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்தது. தற்போது காலக்கெடுவை அடுத்த மாதம் 30ந் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close