பூஜையின் போது லிங்கத்தின் மீது விழுந்து உயிரிழந்த அர்ச்சகர்

  ஐஸ்வர்யா   | Last Modified : 16 Jun, 2018 06:08 pm
priest-collapses-in-someswara-swamy-temple-at-andhra-pradesh

ஆந்திராவில் பூஜை செய்து கொண்டிருந்த அர்ச்சகர் தீடிரென மயங்கி சிவ லிங்கத்தின் மீது விழுந்து உயிர்விட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம், பீமாவரத்தில் உள்ள பிரசித்துப்பெற்ற சோமேஸ்வரர் ஜனார்த்தனன் கோவிலில் தலைமை அர்ச்சகராக பணிபுரிந்து வந்த வெங்கட ராமாராவ் என்பவர் வழக்கம் போல கோவிலை திறந்து சிவலிங்கத்துக்கு பூஜை செய்துள்ளார். அப்போது திடீரென அவர் சிவலிங்கத்தின் மீது விழுந்துள்ளார். உடனே அருகில் இருந்த மற்றொரு அர்ச்சகர், அவரை தூக்கி நிக்கவைத்தார். அப்போது நிதானமின்றி தள்ளாடிய அர்ச்சகர் மீண்டும் சிவலிங்கத்தின் மீது விழுந்துள்ளார்.

இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அர்ச்சகரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு முன்பே இறந்ததாக தெரிவித்தனர். தனது வாழ்நாள் முழுவதும், சிவனுக்கு பூஜை செய்ய ஆசைப்பட்ட அர்ச்சகர் இறுதி மூச்சையில் சிவலிங்கத்தின் மேலே விட்டது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுமக்கள் பலரும் அர்ச்சகர் வெங்கட ராமாராவிற்கு அஞ்சலி செலுத்தி செல்கின்றனர். 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close