ராஜீவ் கொலை குற்றவாளிகளை விடுவிப்பது தவறான முன்னுதாரணமாகிவிடும்: மத்திய அரசு

  Newstm Desk   | Last Modified : 20 Jun, 2018 03:17 pm
releasing-rajiv-gandhi-assasination-convicts-will-set-wrong-precedent

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருப்பவர்களை விடுப்பது தவறான முன்னுதாரணமாகி விடும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் முருகன், பேரறிவாளன், சாந்தன், ஜெயக்குமார், நளினி, ராபர்ட், ரவிசந்திரன் ஆகியோர் கைதாகி சிறையில் உள்ளனர். அவர் சிறையில் அடைக்கப்பட்டு 25 ஆண்டுகளுக்கு மேலான நிலையில்அவர்களை விடுவிக்க கோரிய தமிழக அரசின் மனுவை குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் நிராகரித்தார். மேலும் மத்திய அரசின் பரிந்துரைப்படியே மனு நிராகரிக்கப்பட்டதாகவும் ராம்நாத் கோவிந்த் கூறியிருந்தார். 

இந்நிலையில், இதுகுறித்து உள்துறை அமைச்சகம் தமிழக அரசுக்கு தகவல் அனுப்பி உள்ளது. அதில், "முன்னாள் பிரதமர் கொல்லப்பட்டது ஜனநாயகத்தையே உலுக்கும் சம்பவம். இதில் கைதாகி இருப்பவர்களை விடுதலை செய்வது தவறான முன்னுதாரணமாகி விடும். இந்த கொலையை மிக நேர்த்தியாக திட்டமிட்டு செய்துள்ளனர். மேலும் இதில் வெளிநாட்டவர்களும் உடந்தையாக இருந்துள்ளனர். இந்த சம்பவத்தில் 9 போலீசார் உட்பட 16 பேர் பலியாகினர்" என்று தெரிவித்துள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close