மகாராஷ்டிராவில் இன்று முதல் பிளாஸ்டிக்கிற்கு தடை!

  Newstm Desk   | Last Modified : 23 Jun, 2018 03:35 pm

plastic-ban-in-maharashtra-comes-into-effect-from-today

மகாராஷ்டிரா மாநிலத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகிப்பதற்கான தடை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

மகாராஷ்டிராவில் கடந்த மார்ச் 23ம் தேதி பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டது. மேலும், பயன்பாட்டிலுள்ள பிளாஸ்டிக் பொருட்களை அப்புறப்படுத்த 3 மாதம் கால அவகாசம் வழங்கப்பட்டது. இதையடுத்து ஒரு நாளைக்கு 12,000 டன் அளவிலான பிளாஸ்டிக் கழிவுகள் நீக்கப்பட்டதாக சுற்றுசூழல் துறை அமைச்சர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், 3 மாத அவகாசம் நிறைவடைந்த நிலையில், இன்று முதல் பிளாஸ்டிக் பொருட்கள் தடை மகாராஷ்டிரா மாநிலத்தில் அமலுக்கு வந்துள்ளது. தடையை மீறி பிளாஸ்டிக் பயன்படுத்தியது முதல்முறை கண்டுபிடிக்கப்பட்டால் ரூ.5000 அபராதம், இரண்டாம் முறை கண்டுபிடிக்கப்பட்டால் ரூ.10000 அபராதம், 3வது முறை ரூ. 25,000 அபராதத்துடன் கூடிய சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்மாநில சுற்றுசூழல் துறை அமைச்சர் இதுகுறித்து தெரிவிக்கையில், "நாட்டின் அடுத்த தலைமுறையை பிளாஸ்டிக் உபயோகத்தினால் ஏற்படும் அழிவிலிருந்து காக்க வேண்டும். அதற்கு இப்போதில் இருந்தே  நாம் பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்க வேண்டும். 17 மாநிலங்கள் ஏற்கனவே பிளாஸ்டிக்கை தடை செய்துள்ள நிலையில், தற்போது 18வது மாநிலமாக மகாராஷ்டிரா பிளாஸ்டிக்கை தடை செய்துள்ளது” என தெரிவித்தார். 

 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.